இதே நடைமுறைதான் பி.டி.எஸ்.படிப்பிலும் சேர கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் எம்.பி.பி.எஸ்., அல்லது பி.டி.எஸ்.படித்து முடித்து உயர் படிப்புகளான எம்.எஸ்., எம்.டி. , எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதவேண்டும். தமிழக அரசு நடத்தும் அந்த முதுகலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பச்சையப்பன் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எத்திராஜ் மகளிர் கல்லூரி முதலிய இடங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்கள், பி.டி.எஸ்.படித்த டாக்டர்கள் வந்திருந்தனர். 9ஆயிரத்து 400 பேர் எழுதினார்கள்சென்னையில் மட்டும் தேர்வு மையம் என்பதால் நெல்லை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், கடலூர் ,திண்டுக்கல் , நாமக்கல் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு எழுத வந்திருந்தனர். 625 இடங்களுக்கு 9ஆயிரத்து 400 பேர் எழுதினார்கள். காலை 10மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 1மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் சில டாக்டர்களிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு தேர்வுசற்று கடினமாகத்தான் இருந்தது என்று தெரிவித்தனர். சிலர் நாங்கள் பல வருடங்களாக எழுதுகிறோம் என்றனர். சிலர் எப்படியும் படிக்க இடம் கிடைத்துவிடும் அந்த அளவுக்கு நன்றாக எழுதிஉள்ளோம் என்று தெரிவித்தனர்.