இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பணிகளுக்கு எழுத்து தேர்வை கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்களும், கலை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகளும் ஏராளம்.தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-விரைவில் வெளியிட ஏற்பாடு12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்து முடித்துவிட்டோம். அதன் பின்னரும் அவற்றை சரிபார்த்து தேர்வு முடிவை வெளியிட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. தற்போது இட ஒதுக்கீட்டின்படி ஆட்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறோம். விரைவில் முடிவை வெளியிட ஏற்பாடு செய்துவருகிறோம். அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.