Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
NEW ANNOUNCEMENT
பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் புதிய சலுகைகள் இடம் பெற வாய்ப்பு :
பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் புதிய சலுகைகள் இடம் பெற வாய்ப்பு :
பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை
நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் புதிய சலுகைகள்
இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குப்பின்
புதிதாக பொறுப்பு ஏற்கும் மத்திய அரசு, ஜூன்- ஜூலை மாதங்களில் 2014-15-ம்
ஆண்டுக் கான முழுமையான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும். இடைக்காலபட்ஜெட்அதற்கு
முன்பாக ஜூலை மாதம் வரை உள்ள செலவினங்களுக்கு அனுமதி பெறுவதற்கான இடைக்கால
பட்ஜெட், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை
அன்று தெலுங்கானா விவகாரத்தில் பாராளுமன்றத்தில் வரலாறு காணாத கலகம்
நடைபெற்றது. உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி வீசி தாக்குதல் நடந்தது.பரபரப்பான
இந்த சூழ்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று (திங்கட்கிழமை)
கூடும் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு நிதி மந்திரி ப.சிதம்பரம்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், 12 முதல் 18
பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.சலுகைகள் அறிவிக்கப்படலாம்வழக்கமாக
இடைக் கால பட்ஜெட்டில் புதிய வரிகள் மற்றும் கொள்கை அறிவிப்புகள்
இருக்காது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சில சலுகைகள் இந்த
பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை
மேம்படுத்தும் வகையில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரி விகிதங்கள்
குறைக்கப்படலாம் என்று, ப.சிதம்பரம் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.“வருமானவரி
சட்டம், சுங்கவரி சட்டங்களில் எந்த திருத்தத்தையும் நாங்கள் கொண்டு
வரமுடியாது. ஆனால் ஒரு சட்டத்தில் தேவையான அளவுக்கு மாற்றம் செய்யவேண்டிய
திட்டத்தை கொண்டுவர முடியும்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். சாதனைப்பட்டியல்2-வது
முறையாக ஆட்சி பொறுப்பு ஏற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை
பட்டியலிடுவதற்கு இந்த பட்ஜெட்டை ஒரு வாய்ப்பாக சிதம்பரம்
பயன்படுத்திக்கொள்வார் என்றும், உலகளாவிய கடுமையான பொருளாதார சிக்கலை
சமாளிக்கும் வகையில், நிதிப்பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு
பற்றாக்குறையை அரசு கட்டுப்படுத்துவது குறித்தும் அவர் விளக்குவார் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.2012-13-ம் ஆண்டில், கடந்த 10 ஆண்டுகளில்
இல்லாத வகையில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்தது எப்படி?
என்பதையும், மீண்டும் நாட்டை வளர்ச்சிப்பாதையில் நடைபோட வைப்பதற்கு அரசு
எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் பட்ஜெட்டில் விளக்கம்
அளிக்கிறார். சீர்திருத்த மசோதாக்கள்இந்த நிதியாண்டில்,
வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளிவிவர அலுவலகம்
அறிவித்து இருக்கும் நிலையில், 5 சதவீதத்தை தாண்டும் என்று, பிரதமர்
மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.இன்சூரன்ஸ் மசோதா,
சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி வரிவிதிப்பு முறை போன்ற முக்கிய
சீர்திருத்த சட்ட மசோதாக்கள் மீது ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதால்,
அந்த மசோதாக்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறாது
என்று கருதப்படுகிறது.பாதுகாப்புஏற்பாடுகள்கடந்த
வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கடும் அமளிக்குப்பிறகு பாராளுமன்றம்
கூடுவதால், இன்றைய கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
உள்ளன. உறுப்பினர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இன்றைய
கூட்டத்தில் முக்கிய விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாதுகாப்பு
குறித்து ஆலோசிப்பதற்காக துணை சபாநாயகர் கரியமுண்டா தலைமையிலான பாராளுமன்ற
பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று
(திங்கட்கிழமை) கூட்டி இருக்கிறார். பாதுகாப்பு கருதி எம்.பி.க்களை சோதனை
செய்து சபைக்குள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த
கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








