அவர் கூறியதாவது-கடந்த ஆண்டு (2013) டிசம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 25,70,254 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கியுள்ளன. நிலுவையில் உள்ள கல்விக்கடன் அளவு ரூ. 57,700 கோடி ஆகும்.வட்டியை அரசே செலுத்தும்கடந்த 1-4-2009-ம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் படிப்பு முடியும் வரையில், அதன்பிறகு சிறிது காலமும் வட்டித் தொகையை அரசே ஏற்கும் என்று அறிவித்து இருந்தோம். இந்த அறிவிப்பு மாணவர்கள் குடும்பத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் 31-3-2009 முன்பு கல்விக்கடன் வாங்கியவர்களுக்கும் பின்னர் வாங்கியவர்களுக்கும் இடையே இந்த அறிவிப்பு பாரபட்சமாக அமைந்தது. முன்னதாக கடன் வாங்கியவர்கள் வட்டிச்சுமையால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காக 31-3-2009 வரை கல்விக்கடன் பெற்று 31-12-13 வரை பாக்கி வைத்து இருக்கும் அனைத்து கல்விக்கடன்களுக்கான வட்டியையும் அரசே செலுத்தும் என்று முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது.ரூ.2,600 கோடி ஒதுக்கீடுஇதற்காக ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.ஆனால், 2014 ஜனவரி 1-ந்தேதியிலிருந்து அவர்கள் வட்டி செலுத்த வேண்டும். அதேபோல் கடனாக பெற்ற அசல் தொகையை திரும்பச்செலுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை”.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.