பாதுகாப்பு,கல்வி, சுகாதாரம், தண்ணீர், வீடு, எரிபொருள், மற்றும் சமூகபாதுகாப்பு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் குறைந்த பட்ச தேவையை பூர்த்தி செய்வது அடிப்படை வசதிகளாக கருதப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பூர்த்தி செய்வதற்காக தனிநபர் பொருளாதார மதிப்பீடு மூலம் புதிய வரி உருவாக்கப்பட்டு வரு்கிறது. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட விதிமுறைகளை பயன்படுத்துவதன்மூலம் ஒரு தனி மனிதனின் மாத தேவைக்கு சராசரியாக ஆயிரத்து 544 ரூபாய் தேவைப்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசு அளித்து வரும் மானிய சலுகைகள் அனைத்தும் சாதாரண மக்களுக்கு சென்று சேரும் போது அவை தனி நபர் ஒருவருக்கு சுமார் ரூ.208 என்ற அளவிலேயே கிடைக்கிறது. இதன் மூலம் மேற்கண்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதி்ல ஆயிரத்து 336 ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் படி வறுமைக்கோட்டில் வசிப்போரின் எண்ணிக்கை 56 சதவீதம் ஆகும். நகர்புறங்களை ஒப்பிடுகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் எண்ணி்க்கை 44 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தி்ல ஊரகப்பகுதிகளில் வசிப்பபோரின் எண்ணி்க்கை 61 சதவீதமாக உள்ளது.
பீகார் மாநிலம் முதலிடத்தை வகிப்பதாகவும், தொடர்ந்து உ.பி., ம.பி., ஜார்கண்ட், அசாம்,இமாச்சலபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட்,கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடுத்ததடுத்த இடங்களை பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.








