வருகின்ற 16வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் இன்று
காலை தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்
ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து
தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள்
சந்திப்பில் விளக்கி வருகிறார்.
மேலும் அவர் கூறும் போது வாக்காளர்கள் பெயர் சேர்க்க வசதியாக, வரும் 9ம்
தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், இதுவரை பெயர்
சேர்க்காதவர்கள், பதிவு செய்யலாம். நீக்கல் மற்றும் மாற்றல் உள்ளிட்டவை
செய்ய முடியாது. .
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நடத்தை விதிமுறைகள்
உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. அமைச்சர்கள் அதிகாரிகளை சந்திக்க கூடாது.
சுழல் விளக்குகளுடன் கார்களில் செல்ல கூடாது. மக்கள், ஓட்டுக்கு பணம் வாங்க
கூடாது.
பெரிய தொகைகளை, அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல கூடாது.
மேலும் நோட்டோ பயன்படுத்துவது குறித்து பயிற்ச்சி அளிக்கப்படும் என்று
பிரவீன்குமார் கூறினார்.








