இன்று உலக மகளிர் தினம் சோதனைகளை வெற்றிப்படிகளாக்கி புதிய சரித்திரம் படைப்போம் தமிழக முதல்வர் அவர்களின் மகளிர் தின வாழ்த்து: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்று உலக மகளிர் தினம் சோதனைகளை வெற்றிப்படிகளாக்கி புதிய சரித்திரம் படைப்போம் தமிழக முதல்வர் அவர்களின் மகளிர் தின வாழ்த்து:

வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிப்படிகளாக்கி புதிய சரித்திரம் படைப்போம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
-சர்வதேச மகளிர் தினம்‘‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கேற்ப பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண் டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்து தந்த சமதர்ம சமுதாய கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார முன்னேற்றம் எய்திடும் வகையில் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம்; பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்; ஏழைப்பெண்களுக்கான திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; பெண்களுக்கு உதவித்தொகைபெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்; இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் கூட்டு முயற்சியால் பொருளாதார நிலை உயர்ந்திட மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தியதோடு அக்குழுக்களுக்கு பல்வேறு நிதி உதவிகள் வழங்குவது; அம்மா உணவகங்களில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு; அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு; இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; மகளிர் அதிரடிப்படை; வேலைக்கு செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிட விடுதிகள்; 13 அம்ச திட்டம்தாயின் முதலெழுத்தை குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்தும் உரிமை; மகளிரின் குடியுரிமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ‘குடிமகள்’ என்னும் சொல்லை பயன்படுத்துதல்; வீரதீர செயல் களை புரிந்த பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா விருது’; இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்ச திட்டம்; சிறந்த பெண்மணிக்கு ‘அவ்வையார் விருது’ போன்ற பல்வேறு உன்னதமான மகளிர் தொடர்பான திட்டங்கள் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அனைவரது பாராட்டையும் பெற்று சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மகளிர் தின வாழ்த்துபெண்கள் நல்வாழ்வுக்கு அ.தி.மு.க. அரசு எடுத்த சீரிய முயற்சியினால், தமிழகத்தில் பெண் கல்வி 76 விழுக்காடாக உயர்ந்துள்ளதும், பெண் குழந்தை பாலின விகிதம் 946 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மகளிரும் இந்த திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வினை வளமாக்கி கொள்ள வேண்டும் என்பதே எனது பேரவா.பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றி படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் எனக்கூறி, இந்த இனிய நாளில் அனைத்து மகளிருக்கும் எனது உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H