Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்ட விழா :
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாசிப்பெருவிழா
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி
அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 27–ந் தேதி (வியாழக்கிழமை)
கொடியேற்றத்துடன் மாசிப்பெருவிழா தொடங்கியது.
2–ம் நாள் மயானக்கொள்ளையும், இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி
உலாவும், 3–ம் நாள் காலையில் தங்க நிற பல்லக்கிலும், இரவு பெண் பூத
வாகனத்திலும், 4–ம் நாள் காலையில் தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம
வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 5–ம் நாள் தீமிதி திருவிழாவும்,
இரவு அன்ன வாகனத்திலும், 6–ம் நாள் காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும்,
இரவு ஐராவத யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை
முன்னிட்டு அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவ அம்மனுக்கு பலவித
மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவிலின் உட்பிரகாரத்தில்
வைக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணியளவில் தேர் இழுக்கும் வடகயிறு
ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு
மேற்குப்புற வாயிலில் இருந்த தேரை வடக்கு வாயிலுக்கு பக்தர்கள்
இழுத்துச்சென்றனர்.
இதன் பிறகு கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மன் பம்பை
மேள,தாளம் முழங்க தேரில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை
நடந்தது. இதைத்தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்
இழுத்தனர். அப்போது பக்தர்களின் பக்திகோஷம் விண்ணை முட்டியது. கோவில்
முன்பு புறப்பட்ட தேர், ஒரு முறை கோவிலை சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு
வந்தது.
சிறப்பு பஸ்கள்
விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,
புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஆந்திரா,
கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான
பக்தர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.
விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் 500–க்கும்
மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் கலெக்டர் சம்பத், விழுப்புரம் கோட்டாட்சியர் அனுசுயாதேவி, ஆரணி
பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர்
உண்ணாமலை ஆறுமுகம், துணைத்தலைவர் பரமசிவம், ஒன்றியக்குழு துணைத்தலைவர்
சேகர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதி, மேலாளர் முனியப்பன், ஆய்வாளர்
கோவிந்தராஜி, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் பூசாரி, அறங்காவலர்கள்
ஏழுமலை, பெருமாள், காசி, சின்னதம்பி, வடிவேல், சேகர் மற்றும் கோவில்
பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








