நடைமுறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த விளையாட்டானது தனித்து சிறந்து விளங்கும் ஒரு துறையாக மாற்றம் பெற்றிருக்கிறது. பிற பொழுதுபோக்கு துறைகளுக்கு இணையாக பொருளாதாரம் புழங்கும் துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
விளையாட்டு வீரர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கான தகவல்களை அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களிடமிருந்து கற்று வந்து கொண்டிருந்தனர். தற்பொழுதும் கற்றுக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் ஒவ்வொருவரின் அனுபவம், வெப்பநிலை, பயிற்சி பெறக்கூடிய இடத்திற்கும் போட்டியிடும் திடலின் அமைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள், உணவு குறித்த உறுதியான மற்றும் மிகச்சரியான திட்டம் இல்லாதவர்களாகவே பயிற்சியாளர்கள் காணப்பட்டனர். அந்தக் குறையை போக்குவதற்காகவும், தற்பொழுது உலக அளவில் விளையாட்டு வீரர்களுக்கான உனவு மற்றும் பயிற்சிகள் குறித்த தெளிவான ஆலோசனையை வழங்குவதற்காக புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்தப்படிப்பு தற்போது ஒரு சில கல்லூரிகளால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், விளையாட்டு மற்றும் சத்துணவுக்கான கல்வித்துறையில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து பல்கலைகள் சிறப்பான இடத்தைக் கொண்டுள்ளன.
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் சில...
கொலரோடோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
வழங்கும் படிப்பு: எம்.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்
படிப்பின் சாராம்சம்
அனுபவ ரீதியாக அறிவியலின் துணை கொண்டு கற்றுக்கொடுத்தல் மற்றும் பயிற்சி சார்ந்த விளையாட்டுக்கான சத்துணவு குறித்து விரிவாக கற்றுத்தரப்படுகிறது. உலகின் சிறந்த உணவியல் வல்லுநர்களின் கருத்துக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் துணையோடு கற்றுத்தரப்படுகிறது.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.uccs.edu/bethel/programs/ms_aport_nutrition.htmal
அல்ஸ்டர் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
வழங்கப்படும் படிப்பு
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான சத்துணவு பாடத்தில் பட்டயம் மற்றும் எம்.எஸ்சி. படிப்புகள் பகுதி நேர மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி
பயோ கெமிஸ்ட்ரி, டயட்டிக்ஸ், ஃபுட் அன்ட் நியூட்ரிஷியன், ஹியூமன் நியூட்ரிஷியன், சைக்காலஜி, ஸ்போர்ட் அன்ட் எக்சர்சைஸ் சயின்ஸ், போன்ற படிப்புகளோடு விளையாட்டு சம்பந்தமான இளநிலை படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.study.ulster.ac.uk/prospectus/course/201314/10662
சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா
வழங்கப்படும் படிப்பு: முதுநிலையில் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்
படிப்பின் சாராம்சம்
விளையாட்டு வீரர்களுக்கான சத்துணவுத்துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்தப் படிப்பு உறுதுணை புரிகிறது. மேலும் தொழில் ரீதியான நன்மைகளை உங்களுக்குப் பெற்றுத் தருகிறது. விளையாட்டுத்துறையில் உயர் பதவிகளை அடைவதற்கு துணை புரிகிறது.
மேலும் தகவல்களுக்கு www.usc.edu.au
டெக்சாஸ் பெண்கள் பல்கலைக்கழகம், அமெரிக்கா
வழங்கப்படும் படிப்பு: எம்.எஸ். எக்சர்சைஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்
படிப்பின் சாராம்சம்
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து உணவுப் பழக்கவழக்கங்களை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், இவற்றை நடைமுறையில் எப்படி தெரிந்து கொள்வது என்பதை வகுப்பறையிலும் மற்றும் நேர்முக பயிற்சியின் மூலமும் கற்றுத் தரப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு www.twu.edu
லண்டன் மெட்ரோபோலிடன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
வழங்கப்படும் படிப்பு: எம்.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன்
படிப்பின் சாராம்சம்
குழந்தைகளுக்கான எடை அதிகரிப்பு குறித்த ஆய்வுகள், உடலின் வளர்சிதை மாற்றங்கள், நோய் தொற்றுகள், உணவுக் கட்டுப்பாடு, ஆராய்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு www.londonmet.ac.uk