மலேசியாவின், ஆசியா - இ-பல்கலையின், தொலைதூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்லாது" என யு.ஜி.சி., அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்டவற்றிற்கான அங்கீகாரத்தை, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., வழங்குகிறது. மேலும், அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளின் பட்டியலையும், இந்த அமைப்பு, அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த வகையில் மலேசியாவின், &'ஆசியா - இ-பல்கலை&'யின் பட்டம் தொடர்பான அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
அதில் "மலேசியாவின், ஆசியா - இ-பல்கலையின், தொலைதூர படிப்புகள், தொலைதூர கல்வி கவுன்சில் மற்றும் யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்படவில்லை. இப்பல்கலையில், தொலைதூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்லாது" என அதில் கூறப்பட்டுள்ளது.