சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் பா. டேவிட் ஜவஹர் வெள்ளிக்கிழமைபதிவியேற்றார்.பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வ பணியிடங்களான பதிவாளர் பணியிடம் கடந்த
இரண்டரை ஆண்டுகளாகவும்,தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடம் 9 மாதங்களுக்கு
மேலாகவும் காலியாக இருந்துவந்தன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அண்மையில் நடத்தப்பட்டு,
கடந்த ஜனவரி 29-ம் தேதியன்று அதற்காக நபர்களும் இறுதி செய்யப்பட்டு, நியமன
உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக
பாரதிதாசன் மேலாண்மை நிறுவன பேராசிரியர் பா.டேவிட் ஜவஹர்
நியமிக்கப்பட்டார். தேர்வு கட்டுப்பாட்டாளராக கே.சி.எஸ்.காசி நாடார் கலை
அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். திருமகன் நியமிக்கப்பட்டார்.
இதில் புதிய தேர்வு கட்டுப்பாட்டாளராக திருமகன் உடனடியாக பதவியேற்ற
நிலையில், பதிவாளராக நியமிக்கப்பட்ட டேவிட் ஜவஹர் பதவியேற்பதை பல்வேறு
காரணங்களால் தாமதித்து வந்தார்.
இந்த நிலையில், நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக
பதவியேற்காமல் தாமதித்து வந்த பேராசிரியர் பா. டேவிட் ஜவஹர், வெள்ளிக்கிழமை
சென்னை பல்கலைக்கழக புதிய முழுநேர பதிவாளராக பதவியேற்றுக் கொண்டார்.
இவருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து
தெரிவித்தனர். டேவிட் ஜவஹர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
தா.பாண்டியனின் மகன் ஆவார்.








