சென்னைப் பல்கலைக்கழகத்தின, தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 28-ஆம் தேதி தொடங்க உள்ளன.ஜூன் 11-ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர மற்ற அனைத்து
நாள்களிலும் தேர்வு நடத்தப்படும். தேர்வறை நுழைவுச் சீட்டுகள் தேர்வு
மையத்துக்கு அனுப்பப்பட மாட்டாது.
மாணவர்கள் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் www.ideunom.ac.in இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரங்கள் ஏற்கெனவே இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.








