வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா" ஜெ.,வுக்கு இளையராஜா இசைஅஞ்சலி..
மறைந்த ஜெ.,வுக்கு இளையராஜா சோக கீதம் இயற்றி அவரே பாடியுள்ளார். இந்த
பாடல் இணையதளத்தில் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் வேகமாக பரவி
வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.மறைந்த ஜெ., உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இளையராஜா ஜெ.,வுக்கு ஒரு இசை சமர்ப்பணம் செய்துள்ளார்.➩
" வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,
தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,"
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. " நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா " என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோக உணர்வு உணர முடிகிறது.
அநுபல்லவி:
யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - வானே இடிந்.,
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., - வானே இடிந்.,