தற்போதைய
நிலை பற்றி யோசிக்காமல், எதிர்காலத்தில்
எந்த துறையில் தேவை இருக்கும் என,
அறிந்து இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்வது அவசியம்.
எந்த பிரிவை எடுத்தாலும், தனித்திறனைவளர்த்துக் கொண்டால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும்,''
என, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்
காந்தி தெரிவித்தார்.
சென்னையில்,
"தினமலர்' நாளிதழ் நடத்திய, "உங்களால்
முடியும்' என்ற, இன்ஜினியரிங், கவுன்சிலிங்கிற்கு
வழிகாட்டும் நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்
காந்தி பேசியதாவது:
தேவை இருந்தால் தான்...: பிளஸ் 2 முடித்து, எதிர்கால
கனவோடு வந்துள்ளீர்கள். "எனக்கு இந்த பிரிவில்
தான் ஆர்வம்' என்று, கற்பனையில்
மிதந்து, தவறான முடிவு எடுத்து
விடாதீர்கள். என்ன தான் ஒரு
பிரிவில் சாதித்து விட்டு, ஒரு நிறுவனத்திற்குச்
சென்றாலும், தேவை இருந்தால் தான்
ஆட்களை எடுப்பர்.
எனவே, தற்போது எந்த மாதிரி
தேவை என யோசிக்காமல், எதிர்காலத்தில்
எதில் தேவை ஏற்படும் என,
ஆலோசித்து, பாடப்பிரிவை தேர்வு செய்வது அவசியம்.
சிவில் இன்ஜி., பிரிவில், அதிக
வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப ஐந்தாண்டுத்
திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், தயக்கமின்றி, சிவில் இன்ஜி., பிரிவை
தேர்வு செய்யலாம். சம்பளம் சற்று குறைவாக
இருந்தாலும், சிவில் இன்ஜி., படித்த
யாருக்கும் வேலை இல்லை என்ற
நிலை இல்லை.
இரண்டாவதாக,
எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜி.,
தேர்வு செய்யலாம். இதிலும், நிறைய வேலை வாய்ப்புகள்
உள்ளன. ஐ.டி., துறையிலும்
நிறைய வேலை உண்டு.
இத்துறை
நலிவடைந்து விட்டது என்று யாராவது
கூறினால் நம்ப வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ்
அண்டு கம்யூனிகேசன் படிப்பை விட இது
சிறந்தது. காரணம் கம்யூனிகேசன் சார்ந்த,
நோக்கியா, மோட்டரோலா போன்ற நிறுவனங்கள் எல்லாம்
மூடப்பட்டு வருகின்றன.
அடுத்தாக,
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்யலாம். மெக்கானிக்கல்
இன்ஜினியரிங் பிரிவில், பெண்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்
உள்ளன. தேவையில், 10 சதவீதம் கூட தற்போது
இல்லை. மாணவியர்
தாராளமாக
இந்த துறையை தேர்வு செய்யலாம்.
"ஏரோ நாட்டிக்கல்' படிப்பில் சேரப்போவதாக பலரும் கூறுகின்றனர். அதில்
வேலை வாய்ப்புகள் மிக குறைவு என்பதை
நீங்கள் உணர வேண்டும். "பயோ
டெக்' பொருத்தவரை, தொடர்ந்து, 10, 12 ஆண்டுகள் அதைச் சார்ந்த உயர்
படிப்புகள் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம்.
அப்படி
தொடர்ந்து படிக்க முடியும் என்போர்,
ஆராய்ச்சித்துறையில் ஈடுபட விரும்புவோர், நிறைய
செலவு செய்யும் வகையில் வசதியுள்ளோர் இந்த
துறையை தேர்வு செய்யலாம்.
சிறந்த
எதிர்காலம் : மாணவியருக்கு, "பயோ டெக்' சிறப்பானது
அல்ல; அவர்கள் "ஆர்க்கிடெக்' போன்ற பாடப்பிரிவுகளை செய்தால்,
சிறந்த எதிர்காலம் உண்டு. பாடப்பிரிவுகள் தேர்வு
செய்வதோடு, கல்லுாரி தேர்வு முக்கியம். ஊருக்கு
முக்கியத்துவம் தராதீர்கள்; வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; நல்ல கல்லுாரிகள் எங்கிருந்தாலும்
சேருங்கள்.
வேலை வாய்ப்புகளின்போது, எந்த கல்லுாரியில் படித்தார்
என்பதை பார்த்து சம்பளம் நிர்ணயம் செய்கின்றனர்.
சிறந்த
கல்லுாரிகள் கிடைக்கிறது என்றால், அடுத்த நிலை படிப்புக்களை
நீங்கள் தேர்வு செய்யலாம். அதுதான்
புத்திசாலித்தனம்.
இப்படி
என்ன தான் ஆலோசித்து பாடப்பிரிவுகளை
தேர்வு செய்தாலும், உங்களின் தனித்திறனை வளர்ப்பதுடன், தற்காலத்திற்கேற்ப உங்களை "அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், நீங்கள் ஜொலிக்க முடியாது.
இரண்டாம் ஆண்டிலேயே, "கேட்' நுழைவு தேர்வுக்கு
தயாராக வேண்டும். தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு
ஆங்கிலம் பேசுவது முக்கியம் அல்ல;
சாமர்த்தியமாக பேசும் திறனும் முக்கியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
"கட்-ஆப்' மார்க் உயரும்
- புத்திசாலியாக இருங்கள் : ""இந்த ஆண்டு, "சென்டம்'
அதிகரித்து உள்ளதால் கட்-ஆப் மதிப்பெண்
உயரும். 197.25 ஆக இருந்த எம்.பி.பி.எஸ்.,
கட்-ஆப், 198 ஆக இருந்தாலும் கிடைக்குமா
என்பது சந்தேகம். 192 முதல் 196 வரை கட்-ஆப்
இருந்தால், பி.எஸ்.சி.,
அக்ரி கிடைக்கும். 196 வரை இருந்தால்தான், பி.வி.எஸ்.சி.,
கிடைக்கும்,'' என்றார்.
மேலும்,
""கட்-ஆப்' 182க்குள் இருந்தால்,
பி.பார்ம்., 180க்குள் இருந்தால் பிசியோதரபி
கிடைக்கும். அதற்குள் இல்லை என்றால், புத்திசாலித்தனமாக
யோசித்து அடுத்த படிப்புகளை தேர்வு
செய்யுங்கள்; விரும்பிய பாடம் கிடைக்கும் என,
காத்துஇருந்து பின் வருந்தாதீர்,'' என்றும்,
அவர் தெரிவித்தார்.