அமெரிக்காவின்
"நாசா' ஆய்வு மையம், செவ்வாய்
கிரகத்திற்கு, விண்கலத்தை அனுப்பஏற்பாடுசெய்து
வருகிறது. அதற்கான, திட்டவடிவமைப்பு குழுவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி
மாணவர் விஷ்ணுராம் பரத் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் விண்?வளி ஆய்வு
மையமான "நாசா' நிறுவனம், 2018 ல்,
2 விண்வெளி பயணிகளுடன், செவ்வாய்கிரகத்திற்கு,
ஒரு விண்கலத்தை அனுப்ப
ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான
திட்ட வடிவமைப்பில், ஆலோசனை வழங்க, உலக
அளவில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆய்வ
க்கை சமர்ப்பிக்கும் போட்டியை நடத்தியது. பல்வேறு நாடுகளின், 40 கல்லூரிகளைச்
சேர்ந்த, மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில்,
இந்தியாவிலிருந்து,
சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜினியரிங்
கல்லூரி
மட்டும் தேர்வு செய்யப்பட்டது. இங்கு
மாணவர்கள் ஏ.விஷ்ணுராம் பரத்,
மோஹித் ஆர். தாகூர், வி.
சத்தியா சுப்பிரமணியன், சுந்தரராஜன் ஆனந்த், விஷூ எல்.
ஷா, வி. விஷால், எஸ்.பி. விஷ்ணு கேதார்,
எஸ். விஸ்வநாதன் ஆகிய 8 மாணவர்கள், ஒரு
குழுவாக, செலவை குறைத்தல், வடிவமைப்பின்
தரம், திட்டம் இயக்குவதில் எளிமை,
விண்வெளி பயணிகளின் பாதுகாப்பு குறித்து சமர்ப்பித்த, 50 பக்க ஆய்வு அறிக்கை
சமர்ப்பித்தனர். அது சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அந்த 8 மாணவர்களில், விஷ்ணுராம் பரத், விருதுநகர் மாவட்டம்
சிவகாசியை சேர்ந்தவர். அவருக்கு, நேற்று, விருதுநகர் ரோட்டரி
சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விஷ்ணுராம்
பரத் கூறுகையில், "பி.இ. மூன்றாமாண்டு
இயந்திரவியல் படிக்கிறேன். "நாசா', செவ்வாய்
கிரகத்திற்கு,
மனிதனை அனுப்புதற்கு உரிய திட்டம் ஒன்றை
வகுத்துள்ளது. இதற்கான, பாதுகாப்பு மற்றும்
திட்டமிடுதல்
குறித்த ஆய்வு அறிக்கையை, மாணவர்களிடம்
கேட்டனர். நாங்கள் 8 பேர் கொண்ட குழு,
மார்ச் 15 ல், அந்த ஆய்வு
அறிக்கை சமர்பித்தோம். அதில், பொதுவாக, எரிபொருள்
மூலம் பூமியில் இருந்து செல்லும் விண்கலம்,
செவ்வாய் கிரகம் சென்றதும், அதன்
ஈர்ப்பு விசை காரணமாக, மிதந்து
செல்லும். பின், பூமியின், புவி
ஈர்ப்பு சக்தியை கொண்டு, பூமியை
வந்தடையும். இதற்காக, பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் சென்று, மீண்டும்
பூமிக்கு திரும்ப, 501 நாட்கள் ஆகும். பூமியிலிருந்து
செலுத்தப்படும் விண்கலம், செவ்வாய் கிரகத்தை அடைந்ததும், அங்கு, இன்ஜின் மூலம்
மீண்டும் இயக்கினால், அது, வேகமாக சுற்றி
வரும்.
இதனால்,
பூமியை 70 நாட்களுக்கு முன்பே வந்தடையும், என
அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இதில், விண்வெளி பயணத்தில்
ஈடுபட்டிருப்போருக்கு கதிரியக்கம் தாக்காது, கேன்சர் வராது. குறைவான
உணவு பொருட்கள் கொண்டு செல்வதால், ஆய்வக
கருவிகளை அதிகமாக எடுத்து செல்லலாம்.
மேலும், கேன்சரிலிருந்து பாதுகாக்க, கன உலோகம் மற்றும்
வேதிப்பொருளால் ஆன கவச உடை
அணிந்து கொள்ளலாம். இதை தான் அறிக்கையாக
சமர்பித்துள்ளோம். அப்பணிக்காக, ஆக., 9 ல், நாங்கள்
"நாசா' செல்ல உள்ளோம், என்றார்.