தொழில்நுட்ப
தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று காலை, தேர்வுத்துறை
இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை,
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுத்துறை
அறிவிப்பு: விவசாயம், அச்சுக்கலை உள்ளிட்ட, பல தொழில்நுட்ப பாட
பிரிவுகளுக்கான தேர்வு, வரும், 19ம்
தேதி முதல், ஜூன், 26 வரை
நடக்கிறது. தேர்வர்களுக்கு,www.tndge.in என்ற இணைய தளத்தில், "ஹால்
டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு அட்டவணையும்,
இதில் வெளியிடப்பட்டு உள்ளது.தேர்வர்கள் இன்று,
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த
தேதியை பதிவு செய்து, "ஹால்
டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். செய்முறை தேர்வு நடக்கும் நாட்கள்
குறித்து, தேர்வு மைய முதன்மை
கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.