Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.எஸ்.எல்.வி சி23 ராக்கெட் 5 செயற்கைகோள்களை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது:
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான்
விண்வெளி மையத்தில் இருந்து, வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கை கோள்களை
தாங்கிக் கொண்டு பி.எஸ்.எல்.வி & சி23 ராக்கெட் நாளை காலை 9.52 மணிக்கு
விண்ணில் பாய்கிறது. இதற்கான 49 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8.52
மணிக்கு துவங்கியது.
ஆந்திரா மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி &
சி23 ராக்கெட் நாளை காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
ஆனால் விண்வெளியில் ஏற்கனவே உள்ள பழைய செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்களின்
உடைந்த பகுதிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்வெளி கழிவுகள்,
புதிதாக ஏவப்படும் ராக்கெட்களின் மீது மோதி சேதம் ஏற்படுத்தி விடக் கூடாது
என்பதற்காக அவற்றை கண்காணிக்க பல நாடுகள் சேர்ந்து ஒரு அமைப்பை
ஏற்படுத்தியுள்ளன.
அந்த அமைப்பு, விண்வெளி
கழிவுகள் தொடர்பான தகவல்களை உறுப்பினர் நாடுகளுக்கு பரிமாற்றம் செய்து
கொள்கிறது. இந்த கழிவுகளின் பாதைகள் உள்ளிட்ட தகவல்களை அமெரிக்காவின் நாசா
நிறுவனம் அளிக்கிறது.
இதன்படி, விண்வெளி
கழிவுகளின் மீது மோதி விடாமல் பி.எஸ்.எல்.வி&சி23 ராக்கெட் செல்வதற்காக
இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், �பி.எஸ்.எல்.வி&சி23 ராக்கெட் ஏவும் நேரம் மாற்றி
அமைக்கப்பட்டு 3 நிமிடம் தாமதமாக 9.52 மணிக்கு ஏவப்படும் என முடிவு
எடுக்கப்பட்டது.
இந்நிலையில்,
பி.எஸ்.எல்.வி&சி23 ராக்கெட் ஏவுவதற்கான 49 மணி நேர கவுன்ட்&டவுன்
நேற்று காலை 8.52 மணிக்கு துவங்கியது. கடல்வழிப் போக்குவரத்தை
கண்காணிப்பதற்காக ஜெர்மனி நாட்டின் ஐசாட் செயற்கைகோள், ஜிபிஎஸ் அமைப்புக்கு
உதவும் வகையில் கனடாவின் என்.எல்.எஸ்7.1, மற்றும் 7.2 செயற்கைக்கோள்கள்,
சென்சார் கருவியுடன் கூடிய சிங்கப்பூர் நாட்டின் வெலாக்ஸ்&1
செயற்கைகோள் ஆகியவை இந்த ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
ஸ்ரீஹரிகோட்டா
சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி&சி23 ராக்கெட்
விண்ணில் ஏவப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுகிறார்.
இதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து
தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு செல்கிறார். அவர் இரவு அங்கேயே
தங்குகிறார். நாளை காலை 9.52 மணிக்கு ராக்கெட் ஏவப்படுவதை
பார்வையிடுகிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு சென்னை
வந்து 11.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
பிரமதர்
வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தை சுற்றிலும் 7 அடுக்கு போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புப்படை
பிரிவினரும் சென்னை வந்து கண்காணித்து வருகின்றனர். பிரதமர் பயணத்துக்காக
குண்டு துளைக்காத 4 விமானப்படை ஹெலிகாப்டர்களும் பழைய விமான நிலையத்தில்
தயாராக உள்ளன.
பிரதமர் மோடி பங்கேற்பு
பிரமதர்
வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தை சுற்றிலும் 7 அடுக்கு போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புப்படை
பிரிவினரும் சென்னை வந்து கண்காணித்து வருகின்றனர். பிரதமர் பயணத்துக்காக
குண்டு துளைக்காத 4 விமானப்படை ஹெலிகாப்டர்களும் பழைய விமான நிலையத்தில்
தயாராக உள்ளன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








