1.
எவ்வளவுதான் படித்திருந்தாலும் படித்ததெல்லாம் மறந்து போனது போன்று
இருக்கும். இது உங்களுக்கு மட்டுமல்ல பல வருடம் படித்து எழுதப் போகும்
தேர்வர்க்கும் இதே போன்று தான் இருக்கும்.. பயம் வேண்டாம்
2. தேர்வுக்கு முன் தயவு செய்து எதை பற்றியும் விவாதம் வேண்டாம். அமைதியாக சென்று அமைதியாக வரவும்.
3. தேர்வில் கேள்வி கடினமாக இருந்தால் கவனமாக பதில் அளிக்க வேண்டும்.
எளிதாக இருந்தால் அதைவிட கவனமாக பதில் அளிக்க வேண்டும். எல்லோரும் செய்வது பார்த்த உடன் தவறாக பதில் அளித்து வருவது. இதுதான் கடின உழைப்பை வியர்த்தமாக்கும் 2. தேர்வுக்கு முன் தயவு செய்து எதை பற்றியும் விவாதம் வேண்டாம். அமைதியாக சென்று அமைதியாக வரவும்.
4. நான்கு பதில்களையும் பார்த்து விடை அளிக்கவும். நாம் படித்த வார்த்தை ஒன்று தென்பட்டால் உடன் குறித்து விட கூடாது.
5. அந்த மூன்று மணி நேரத்தில் Bubble Gum வாயில் போட்டு கொண்டு சுவைத்து கொண்டே இருந்தால் மூளை சற்று சுறுசுறுப்பாக வேலை செய்யும்.. ஆய்வின் படி நிரூபணம்.. நான் இதைத்தான் செய்வேன். அப்படி இல்லை என்றால் குளுகோஸ் நிரப்பப்பட்ட நீர் கொண்டு செல்லுங்கள். நரம்பு மண்டலம் சரியாக செயலப்ட வேண்டுமெனில் சோடியம் பொட்டாசியம்(NEURO TRANSMITTERS) தேவை என்று படித்திருப்பீர்கள்.
6. தேர்வு எழுதி முடித்த உடன் அந்த தேர்வு எழுதியதையே மறந்து விட வேண்டும். அடுத்த தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட வேண்டும்.முடிவுகள் 6 மாதமோ அல்லது 10 மாதமோ கழித்து வந்தால் உங்கள் பாக்கியம்
ALL THE BEST-thanks to Siva Anantha Krishnan







