சென்டாக் கவுன்சலிங் தொடக்கம் அரசு கல்லூரியை துணிச்சலாக தேர்வு செய்த மாணவி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சென்டாக் கவுன்சலிங் தொடக்கம் அரசு கல்லூரியை துணிச்சலாக தேர்வு செய்த மாணவி:

புதுவையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது. 2014&15ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு 3385 நபர்கள் அடங்கிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
பின்னர் அறிவித்தபடி நேற்று சென்டாக் கவுன்சலிங் தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் பங்கேற்க புதுவை அரசு பொறியியல் கல்லூரி சென்டாக் வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்களுடன் குவிந்தனர். அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரம், பிம்ஸ் மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருப்பதால் குழப்பத்தில் இருந்தனர். இதற்கு சென்டாக் அதிகாரிகள் மாணவர்களிடம் தெளிவான விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து ஒருமணிநேரம் தாமதமாக சென்டாக் கவுன்சலிங் தொடங்கியது. ரேங்க் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்த ஆனந்தகுமார் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதனால் 2ம் இடத்திலிருந்த ஸ்ரீஜா (கட்& ஆப் மதிப்பெண் 197) பங்கேற்று அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை தேர்வு செய்தார். அவரைத் தொடர்ந்து சாய்நாத் (கட்&ஆப் 195) பிம்ஸ் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார்.
சென்டாக் கவுன்சில் உத்தரவுபடி கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு �தற்காலிக ஒதுக்கீடு தகவல்” எனும் படிவம் கொடுக்கப்பட்டது. அதில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளின் விபரம் கேட்கப்பட்டிருந்தது. அவற்றை கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கல்லூரியில் சேருவதற்கான ஆணை ஜூலை 2ம் வாரத்தில் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று சென்டாக் துணை கன்வீனர் திலகர் உறுதியளித்தனர். அதை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு அடுத்தடுத்து கலந்தாய்வு நடைபெற்றன.
இதில் மாணவ& மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிற்பகலில் பொதுப்பிரிவுக்கான சென்டாக் கவுன்சலிங் தொடங்கியது.
சென்டாக்கில் முதலாவதாக கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவி ஸ்ரீஜா கூறுகையில், நான் எதிர்பார்த்ததுபோல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கல்லூரி வாரியாக எம்பிபிஎஸ் காலியிடங்கள்
புதுவையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆண்டுதோறும் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதன்படி இந்தாண்டுக்கான சென்டாக் கவுன்சலிங் நேற்று நடந்தது. மருத்துவ படிப்பில் சிறப்பு, பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் நேற்று நடந்தது. இன்று காலை 9 மணிக்கு மீண்டும் பொதுப்பிரிவுக்கு நடைபெறும் கவுன்சலிங்கில் 191.777 முதல் 173.333 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்கான நேரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள சென்டாக் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று நடந்த கவுன்சலிங்கிற்கு பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள காலியிடங்கள் விவரம்: (அடைப்பு குறியில் மொத்த இடங்கள்)
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி& 18 (127).
தனியார் மருத்துவ கல்லூரிகள்
பிம்ஸ் & 7 (36), மகாத்மாகாந்தி & 30 (36), அறுபடைவீடு& 21 (24), விநாயகா மிஷன்& 24 (25), மணக்குளவிநாயகர்& 18 (54), வெங்கடேஸ்வரா &30 (53), ஸ்ரீலட்சுமி நாராயணா & 34 (37),
மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவகல்லூரி& 20 (29),
தனியார் பல் மருத்துவ கல்லூரிகள்
இந்திராகாந்தி பல் மருத்துவகல்லூரி& 23 (25), மாகி பல் மருத்துவக்கல்லூரி& 33 (35), வெங்கடேஸ்வரா& 32 (35)
எம்பிபிஎஸ், பல் மருத்துவபடிப்புக்கு இன்றுடன் முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைகிறது. தற்போதுவரை 3 கல்லூரிகளுக்கு மட்டுமே கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிம்ஸ் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரமும், மணக்குள விநாயகர் கல்லூரிக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரமும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிக்கு கட்டண விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
மேலும் தகவலை அறிய சென்டாக் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சென்டாக் கவுன்சலிங்கில் முதலாவதாக அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்த மாணவி ஸ்ரீஜாவுக்கு துணை கன்வீனர் திலகர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H