புதுவை அரசு மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டுமென மத் திய சுகாதார அமைச்சரிடம்
கவர்னர் வீரேந்திர கட்டா ரியா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற
தேர்த லில் பாரதிய ஜனதா பெரும்பான்மை பெற்று, பிரதமராக நரேந்திர மோடி
கடந்த 26ம் தேதி பதவி யேற்றார். இதையடுத்து மத்திய பாஜக அரசு, காங்கிரஸ்
ஆட்சியில் நிய மிக்கப்பட்ட கவர்னர்களை மாற்றப்போவதாக தகவல் வெளியானது. இந்த
பட்டி யலில், புதுவை கவர்னர் வீரேந்திர கட்டாரியா பெயரும் இடம் பெற்றதாக
கூறப்பட்டது.
இந்த மாற்றல் உத்தரவை தடுத்து
நிறுத்தும் முயற்சி யில் கவர்னர் வீரேந்திர கட்டாரியா ஈடுபட்டுள்ள தாக
கூறப்பட்டது. கடந்த மாதம் 10 நாட்கள் டெல்லி யில் முகாமிட்டிருந்தார்.
அப்போது நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு புதுவை
திரும்பினார். பின்னர் கடந்த 9ம் தேதி டெல்லி சென்று அங்கு 6 நாட்களாக
முகாமிட்டு இருந்த, கவர்னர் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.
நேற்று காலை அவர் புதுவை வந்து சேர்ந்தார். கவர்னர் வீரேந்திர
கட்டாரியாவின் டெல்லி பயணம் குறித்து கவர்னர் மாளிகை வெளி யிட்ட
செய்திக்குறிப்பு:
கவர்னர் வீரேந்திர கட்
டாரியா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது
புதுவை மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்
என்றும், தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை
பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷவர்த் தனை சந்தித்து புதுவை அரசு மருத்துவகல்லூரி முதலாம் ஆண்டு
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க தேவையான நட வடிக்கை எடுக்குமாறு வலி
யுறுத்தினார்.
இந்திய மருத்துவ கவுன் சில்
கூறியபடி பேராசிரியர் கள் நியமிக்க முதல்வர் ரங்கசாமி தேவையான நட வடிக்கையை
எடுத்து வரு கிறார் என்றும் தெரிவித் தார். வெளியுறவுத்துறை அமைச்சர்
சுஷ்மா சுவ ராஜை சந்தித்து இந்தோ & பிரெஞ்சு உறவுகளை மேம் படுத்தவும்,
வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். அவரை
புதுவைக்கு வர வேண்டு மென அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று மத்திய
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருவதற்கு சம் மதம் தெரிவித்து உள்ளார். ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்.
அதற்கான
ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் மனைவி உடல்நிலை சரியில்லா
ததால் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது அனைத்து
நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் அவரை பார்க்க முடியவில்லை. இவ்வாறு
கூறப்பட்டு உள்ளது.







