சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் தங்கள்
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட
ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்
உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர்கள்,
இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயினர்
வகுப்பை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி
உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2014&15ம் ஆண்டிற்கு கல்வி
உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்
கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரது
ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ,
மாணவிகள் முந்தைய ஆண்டில் இறுதி தேர்வில்(ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50
விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
பிற்பட்டோர் நலத்துறை மற்றும்
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதரத்துறைகளின் நலவாரியங்கள் மூலம்
2014&15ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில்
அதிக பட்சமாக இருவருக்கு மட்டும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
குறைந்த
வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை
வழங்கப்படும். புதியதாக விண்ணப்பிப்பதற்கும் ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை
புதுப்பிப்பதற்கும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை
ஷ்ஷ்ஷ்.தீநீனீதீநீனீஷ்.tஸீ.ரீஷீஸ்t.வீஸீ
என்ற
இணைய தள முகவரியிலிருந்து படியிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து
தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் விண்ணபிக்க
வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை சரிபார்த்து
கல்வி நிறுவனங்கள் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதற்கான கேட்பு பட்டியலை
மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் அளிக்க
வேண்டும்.
விண்ணப்பம் வரவேற்பு







