குழந்தைப் பருவத்திலேயே தங்களை தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான
பயிற்சி அளிப்பது அவசியம் என்பதை உணர்ந்த சீன ஆரம்பப் பள்ளி ஒன்று, நீரில்
மூழ்கும்போது தப்பிக்கும் பயிற்சி அளிக்கத் துவங்கியுள்ளது.
சீனாவின், ஹூனான்
மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில், ஆன்டி டிரவுனிங் லெசன்ஸ் என்னும்
தலைப்பில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த பாடத்தில் நீரில் விழுந்து
மூழ்கும்போது, மீட்புப் படையினர் வருவதற்குள் தங்களை பாதுகாத்துக் கொள்ள
குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் செயல்முறை பாடமாக
சொல்லித் தருகின்றனர்.
அதன்படி, ஒவ்வொரு மாணவ, மாணவி முன்பு வைக்கப்பட்ட ஸ்டூல்
மீது தண்ணீர் நிரம்பிய தொட்டிகள் வைக்கப்படுகின்றன. ஆசிரியரின்
வழிகாட்டுதலின்படி, வாளியில் உள்ள தண்ணீரில் தங்கள் முகத்தை மூழ்கச் செய்து
மூச்சடக்கும் பயிற்சி பெறுகின்றனர்.
இதுபோன்ற பல தற்காப்பு கலைகள் சீனப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.







