Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சிபிஎஸ்இ பாடத்திற்கு எதிர்ப்பு உருவபொம்மை எரித்த போது தீயில் கருகிய வாலிபர்;
புதுவையில் சிபிஎஸ்இ கல்வி திட்டத்தை கண்டித்து
பல்வேறு அமைப்புகள் நடத்திய சட்டசபை முற்றுகை மற்றும் உருவபொம்மை எரிப்பு
போராட்டத்தில் வாலிபர் மீது தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
புதுவையில் கட்டாய கல்வி உரிமை
சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டாய கட்டண கல்வி கொள்ளையை தடுத்து
நிறுத்த வேண்டும், தாய் தமிழ்மொழியை கேள்விக் குறியாக்கும் சிபிஎஸ்இ மத்திய
அரசு பாடத்திட்டத்தை புதுவை அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி புதுவை சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் மற்றும் கொடும்பாவி
எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
புதுவை
பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தலைவர் தீனா என்ற தீனதயாளன் தலைமை
தாங்கினார். பெரியார் திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகி கோகுல்காந்திநாத்,
பசுமை அலைகள் இயக்கம் வீரபாரதி, தமிழ்&தமிழர் இயக்கம் மகேஷ், பூரான்கள்
இயக்கம் போன்ஸ் ரமேஷ், கர்ணா, சந்திரன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
மிஷன்வீதி
ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே திரண்ட போராட்டக்குழுவினர் சட்டசபையை
முற்றுகையிடுவதற்காக செஞ்சி சாலையை நோக்கி சென்றனர். செயின்ட் ஆக்னே தெரு
அருகே சென்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த முதல்வர் ரங்கசாமி, கல்வி
அமைச்சர் தியாகராஜனின் உருவபொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சரவணன் மீது எதிர்பாராத விதமாக பெட்ரோல்
சிதறியதால் திடீரென அவர் மீது தீ பற்றி கொண்டது.
தீ
பற்றியதும் சரவணன் அலறி துடித்தார். உடனிருந்தவர்கள் அவரது துணி களை
களைந்து அருகில் இருந்த டீக்கடையில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று அவர்
மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதில் சரவணனின் இரு காலிலும் பலத்த தீக்காயம்
ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீ
விபத்து ஏற்பட்டதால் போராட்டக்காரர்கள் சிறிது நேரம் திகைத்தனர். பின்னர்
மீண்டும் மறியலில் ஈடுபட்டு செஞ்சி சாலையில் போலீசார் போட்டிருந்த தடுப்பை
மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றனர். பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜிந்தா
கோதண்டராமன் தலைமையிலா போலீசார் அவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 39
பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








