Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!
மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச்
சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக
பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில்
மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார்.
அவருக்கு இணையாக
சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர்
குழு பரிந்துரைப்படி, ஆசிரயர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை.ஏ.இ.ஓ.,
பதவி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை.
எங்களுக்கு மேல் பணியிடம் கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள
விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன்
முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மேற்பார்வையாளர்
சம்பளம் ஐகோர்ட் உத்தரவுப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம்
நிர்ணயிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு
கிடையாது. தமிழக அரசு 2011 அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என
தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க
வேண்டும். தேர்வு நிலை பணிக்கான நோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி
மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான உத்தரவு ரத்து
செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








