இங்கு வெளியிடப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் போட்டித்தேர்வுக்கான பொதுத்தமிழுக்கான உத்தேசமான வினா - விடைகள். TNPSC ஆல் வெளியிடப்படும் விடைகளே முடிவானதாகும். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இங்கு வெளியிடப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் போட்டித்தேர்வுக்கான பொதுத்தமிழுக்கான உத்தேசமான வினா - விடைகள். TNPSC ஆல் வெளியிடப்படும் விடைகளே முடிவானதாகும்.

தேர்வு நாள்: 14.06.2014
1. சரியாகப் பொருத்துக:
நூலாசிரியர்  -  நூல்
அ. சுரதா - 1.கொடிமுல்லை
ஆ. முடியரசன் - 2.பள்ளிப்பறவைகள்
இ. வாணிதாசன் - 3.எச்சில் இரவு
ஈ. ஆலந்தூர் மோகனரங்கன் - 4.பூங்கொடி
விடை: ஆ. 3 - 4 - 1 - 2

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக்குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத்தேர்வு செய்
விடை: அ. அன்மொழித்தொகை சேய்மைச்சுட்டு

3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்ப்பபடும் - இதில் பயின்று வரும் மோனைச்சொற்கள்.
விடை: அ. ஒழுக்கம் - ஒழுக்கம்

4. உடம்பார் அழியின் உயிரார் அழிவார்  - இச்செய்யுளில் வயின்று வரும் மோனை
விடை: ஈ) பொழிப்புமோனை 

5. மா முன் நிரையும் விள முன் நேரும் வருவது
விடை: ஆ) இயற்சீர் வெண்டளை

6. பூவோடு சேர்ந்த நார்போல - உவமை உணர்த்தும் பொருள்
விடை: இ) உயர்வு

7. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:
அ. தி.ஜானகிராமன் - 1.சாயாவனம்
ஆ. க.நா.சுப்பிரமணியன் - 2. செம்பருத்தி
இ. சா.கந்தசாமி - 3 கரைந்த நிழல்கள்
ஈ. அசோகமித்திரன் - 4. பெரியமனிதன்
விடை: அ)

8. கற்பனைக்களஞ்சியம் என்று போற்றப்படுபவர் -
விடை: ஈ) சிவப்பிரகாசசுவாமிகள்

9. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நூல் எது?
விடை: இ) போற்றிக்கலிவெண்பா (நக்கீரர் பாடிய 10 நூல்களில் ஒன்று)

10. பின்வருவனவற்றுள் எது சமண இலக்கியம் இல்லை?
விடை: இ, குண்டகேசி

11. பின்வரும் பட்டியலில் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய நூல் எது?
விடை: இ) தமிழ்ப்புலவர் சரித்திரம்

12.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று: 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம்
விளக்கம்: பலவகைப்பாக்களையும் கலந்து பாடுவது கலம்பகம் அகமும் புறமும் கலந்து பாடப்படுவது கலம்பகம்
விடை: இ) கூற்று மற்றும் விளக்கம் இரண்டும் சரி

13.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது - இக்குறட்பாவில் நுணங்கிய - என்னும் பொருளுணர்த்தும் ஆங்கிலச்சொல்
விடை: B) INTELIGENT

14. மனைக்கு விளக்கம் மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்--- இப்பாடல் ஆசிரியரைக் கண்டறிந்து எழுதுக
விடை: அ) விளம்பிநாகனார்

15.பின்வருவனவற்றுள் ஈறுபோதல் முன்நின்ற மெய் திரிதல் என்னும் விதிகளின் படி புணர்ந்தது
விடை: ஈ) செங்கதிரோன்

16. பின்வருவனவற்றுள் பொருந்தாத பொருள் எது?
விடை: இ) குப்பம் - குறிஞ்சி நில் வாழ்விடம் (ஆறாம் வகுப்பு துணைப்பாடம்)

17. அற நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என்னும் நூலாகத்தொகுத்து விளக்கம் அளித்தவர் -
விடை: இ)ஜி.யு.போப் (8ம் வகுப்பு துணைப்பாடம்)

18. சமூகத்தின் மாற்றத்திற்குச்சிந்தனை விதைகளைத்தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது எனக்கூறியவர்
விடை: அ) அம்பேத்கர் (10ம் வகுப்பு உரைநடை அண்ணல் அம்பேத்கர்)

19. பின்வருவருள் யார் சைவ அடியாரில்லை?
விடை: ஈ) பெரியவாச்சான் பிள்ளை

20. நூலாசிரியரோடு நூலைப் பொருத்துக
அ.சுத்தானந்த பாரதி - ஏழைபடும் பாடு
ஆ.வ.வே.சுயஐயர் - கமலவிஜயம்
இ.சுப்பிரமணியபாரதி - ஞானரதம்
ஈ.வீராசாமி செட்டியார் - விநோதரஸ மஞ்சரி
விடை: ஈ (பொருத்துயுள்ளோம்)

21. பொருளறிந்து பொருத்துக
அ. பிடர்தலை - 1.துர்க்கை
ஆ. எழுவருள் இளையவர் - 2.பத்ரகாளி
இ.இறைவனை நடமாடச்செய்சவர் - 3.பிடாரி
ஈ.தாருகன் மார்பைப்பிளந்தவர் - 4.கொற்றவை
விடை: அ) 4 - 3 - 2 - 1 (10ம் வகுப்பு - சிலப்பதிகாரம்)

22. மதியிலி அரசர் நின் மலரடி பணிகிலர்
  வானகம் ஆள்வாரே - இப்பாடலுக்குரிய அரசன்
விடை: ஆ) நந்திவர்மன்

23. தாமரையிலைத்தண்ணீர் போல - உவமை உணர்த்தும் பொருள்
விடை: இ) பற்றின்மை

24. எவ்வகைவாக்கியம் எனக்கண்டெழுதல்: வேடன் சிங்கத்தை வீழ்த்தினான்
விடை: அ) தனி வாக்கியம்

25. விடைக்கேற்ற வினாவைத்தேர்க: கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்
விடை: ஆ) நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?

26. பின்வருவனவற்றுள் தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்னும் விதியின்படி புணராதது
விடை: இ)பைந்தமிழ்

27.சாதுவன் வாணிகன் செய்யும் பொருட்டுக்கடல் கடந்து சென்ற குறிப்பு - இடம் பெற்ற நூல் எது?
விடை: ஈ) மணிமேகலை

28. பொருத்துக
அ.திரு.வி. கலியானசுந்தரம் - 1.தமிழ்த்தாத்தா
ஆ. மறைமலையடிகள் - 2.தமிழ்தென்றல்
இ.இரா.பி.சேதுப்பிள்ளை - 3.தனித்தமிழ் வித்தகர்
ஈ. உ.வே.சாமிநாதஐயர் - சொல்லின் செல்வர்
விடை: ஈ) 2 - 3 - 4 - 1

29. நெடுங்கடலூம் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தூன்நல்கா தாகி விடின் என்னும் குறள் கூறும் அடிப்படையில் பின்வருவனவற்றில் எதைக்குறிக்கும்?
விடை: ஈ) நீரியல் அறிவு (10ம் வகுப்பு தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்)

30. பொருந்தாததைச்சுட்டுக
விடை: ஆ) ஏமம்  (10ம் வகுப்பு தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்)

31. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்டனே என்ற அடி இடம் பெற்ற நூல்
விடை: ஈ) புறநானூறு (10ம் வகுப்பு உரைநடை - தொன்மைத் தமிழகம்)

32. குறுந்தொகை என்ற நூலைத்தொகுத்தவர்
விடை: இ) பூரிக்கோ

33. செல்வத்துப்பயனே ஈதல் எனப்பாடியவர்
விடை: ஆ) நக்கீரனார்

34. பொருந்தா இணையைத்தேர்க
விடை: ஆ) க - சாலை

35. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: இளமையில் கல்
விடை: இ) கட்டளை வாக்கியம்

36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாச்சொல்லை தேர்க: உவமைத்தொகை
விடை: அ) தமிழன்னை

37. பின்வருவனவற்றுள் எது அண்ணாவின் படைப்பு அன்று?
விடை: இ) குறட்டை ஒலி

38. கற்கின்றனர் என்னும் நிகழ்கால வினைமுற்றின் வேர்ச்சொல்
விடை: ஈ) கல்

39. பின்வருவனவற்றுள் எவை இணையில்லை?
விடை: ஆ) முதல் பரணி - தக்கயாகபரணி
முதல் பரணி - கலிங்கத்துப்பரணி

40. மனிதனின் மனநிலையை இருள் மருள் தெருளள் அருள் எனக்கூறியவர்
விடை: ஈ) முத்துராமலிங்கத்தேவர் (6ம் வகுப்பு உரைநடை)

41. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி - என தமிழினத்தின் தொன்மையைப்பற்றிக்கூறும் நூலின் பெயர்
விடை: ஆ) புறப்பொருள் வெண்பா மாலை

42. பொருந்தாத பெயரைச்சுட்டுக
விடை: இ) சூளாமணி

43. பொருந்தாத இணையச்சுட்டுக
விடை: ஆ) துகில் - அகில்

44. குளம் நிறைந்த நீர்த்தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வனம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்தணைந்தார் இப்பாடலுக்குரிய கதாநாயகன்
விடை: அ) திருநாவுக்கரசர் (10 வகுப்பு பெரியபுராணம்)

45. ஒலி வேறுபாடறிந்து சரியானப்பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
விடை: இ) வாசனை - உள்ளம்

46. ஒற்றளபடைச்சொற்களுள் மாறுபட்டு நிற்பதை கண்டறிந்து எழுதுக
விடை: அ) வாழ்க்கை

47. பயணம் என்ற சொல்லிற்கு செலவு என்ற சொல்லை முதன்முதலில் பன்படுத்தியவர்
விடை: இ) திரு.வி.கலியாணசுந்தரனார்

48. அரிவற்றுள் எல்லாம் அரிதோ - பெரியாரைப் இவ்வடியில் பயின்று வரும் எதுகை
விடை: ஈ) மேற்கதுவாய் எதுகை

49. அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு செயல்வேண்டும் - இதில் பயின்று வரும் இயைபுச்சொல்
விடை: ஈ) வேண்டும் - வேண்டும்

50. ஈற்றடியின் ஈற்றுச்சீரானது ஒரசை வாய்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும் பா வகை
விடை: இ) வெண்பா

51. உண்மைநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்
விடை: இ) உமாபதி சிவாசாரியார்

52. முதன்முதலில் தமிழ்ப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர்
விடை: ஆ) சீகன் பால்க்ஐயர்

53. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்
விடை: அ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏழாம் வகுப்பு பாட நூல்)

54. கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
விடை: ஆ) கூற்று சரி விளக்கம் தவறு மேலும் கூற்றுக்கு விளக்கம் சரியான விளக்கமன்று

55. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
விடை: அ) கூற்று மற்றும் விளக்கம் இரண்டும் சரி. மேலும் கூற்றுக்கு விளக்கம் சிரியான விளக்கமாகும்.

56. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
விடை: ஆ) கூற்று சரி விளக்கம் தவறு

57. பொருத்துக
ஆசியர் - சிறுகதை
அ.மு.வரதராசனார் 1.மெல்ல மெல்ல மற
ஆ.மதி எஸ்.இலட்சுமி 2. நன்றிப்பரிசு
இ.நீலவன் - 3.மணம் நுகர்ந்தற்குப்பணம்
ஈ. இலட்சுமி - 4.குறட்டை ஒலி
விடை: அ) 4 - 3 - 2 - 1

58. மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
  தொக்க விலங்கும் பேயும்என்றே இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்
விடை: இ( மணிமேகலை

59. பொருந்தும் இலக்கணம் யாது?
விடை: ஈ)நீர்முகில் - 2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

60. பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?
விடை: ஆ) செந்நீர் - வினைத்தொகை

61. கூவா முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினார் இச்செய்யுளடிகளில் இறைஞ்சினார்
விடை: இ) இலக்குவன்

62. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக.
அ. அம்பி - 1.குஞ்சி
ஆ.அல்  - 2.பறை
இ.துடி - 3.இருள்
ஈ.தலைமுடி - 4.படகு
விடை: அ) 4 - 3 - 2 - 1

63. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக
விடை: அ) 4 - 3 - 1 - 2

64. சரியானவற்றைதேர்க
தெய்வம் - திணை
1.ஊடலும் ஊடல் நிமித்தமும் - மருதம்
2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - முல்லை
3. இரங்குலம் இரங்கல் நிமித்தமும் - நெய்தல்
4. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - பாலை
விடை: இ) 1ம் 3ம் சரி

65. சரியானவற்றைதேர்க
தெய்வம் - திணை
1.முருகன் - குறிஞ்சி
2. இந்திரன் - மருதம்
3. துர்க்கை - நெய்தல்
4. திருமால் - பாலை
விடை: ஆ) 1ம் 2ம் சரி

66. இலக்கண குறிப்புச்சொல்லை எழுதுக : இன்னியசை அளபெடை
விடை: ஈ) தாங்குறூம்உம்

67. பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையத் தெரிந்தெடுத்து எழுதுக
விடை: ஈ) குயில் பாட்டு - பாரதிதாசன்

68. பின்வருவனவற்றுள் எது பொருந்த்தாது?
விடை: இ) குண்டலகேசி

69.ஈற்றலடி முச்சீராக ஏனைய அடிகள் நாற்சீராக அமையும் பா வகை - பின்வருவனவற்றுள்
அ. நேரிசை ஆசிரியப்பா ஆ. நிலை மண்டில ஆசிரியப்பா இ. அடிமறி மண்டில ஆசிரியப்பா ஈ. இணை குறள் ஆசிரியப்பா
விடை: அ) நேரிசை ஆசிரியப்பா (பத்தாம் வகுப்பு இலக்கணத்தில் பா வகைகள்)

70. பொருளறிந்து பொருத்துக
சொல் - பொருள்
அ. கலாபம் - 1.கிளி
ஆ. விவேகன் - 2.பொய்கை
இ. வாவி - 3. ஞானி
ஈ. அஞ்சுகம் - 4. தோகை
விடை: அ) 4 - 3 - 2 - 1

71. திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
விடை: ஈ) பாரதிதாசன்

72. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: நேற்று எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.
விடை ஆ) செய்தி வாக்கியம்
73. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விடை: அ) கட்டடப்பகுதி - ஒன்றில் பாதி

74. பொருந்தாத இணையைக் கண்டறிக
விடை: ஈ) பெருஞ்சித்திரனார் - தமிழ்ச்சோலை

75. அகர வரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக.
விடை: இ) பாட்டு பிட்டு பூட்டு பெண் பொன்

76. நூலையும் நூலாசியரையும் பொருத்துக
அ. வேதநாயகம் பிள்ளை - 1. மான விஜயம்
ஆ. சுரிய நாராயண பிள்ளை - 2. அகலிகை வெண்பா
இ. வெ.ப.சுப்பிரமணிய முதலியார் - பாரிகாதை
ஈ. ரா.ராகவைங்கார் - 4. நீதிநூல்
விடை: அ) 4 - 1 - 2 - 3

77. பின்வருவனபற்றுள் நா.பார்த்தசாரதி எழுதிய நூலைச்சுட்டுக.
விடை: ஆ) சமுதாய வீதி

78. பின்வரும் தொகுப்பில் பொருந்தாத சொல்லினை எடுத்தெழுதுக.
விடை: ஈ) வெம்மை

79. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக
விடை: ஆ) மண் மீன் முடி மெல்ல மையல்

80. உதவு என்ற சொல்லின் சரியான பொருள் உணர்த்தும் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விடை: ஈ) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H