பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை செய்து காட்டும்
வகையில், ஆசிரியர்களுக்கான கையேடு அச்சிடப்பட்டுள்ளது. அதில் உள்ள
செய்முறைகளை செய்து காட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று
தொடங்கியது. கடந்த 2012ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்
அறிவியல் பாட செய்முறைகள் கட்டாயமாக்கப்பட்டது.
அதனால் பொதுத்தேர் வில் செய்முறை தேர்வுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து,
அறிவியல் பாடத் தில் 16 செய்முறைகள் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் செய்தனர்.
இந்த ஆண்டு முதல் அந்த செய்முறைகள் 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில்
10 செய்முறைகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செய்து காட்ட வேண்டும்.16
செய்முறைகளை மாணவர்கள் செய்ய வேண்டும். செய்முறைகளை மாணவர்கள் விளங்கிக்
கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் எப்படி செய்துகாட்ட வேண்டும் என்பதை
விளக்கும், எளிய நடையுடன் கூடிய கையேடு ஒன்றை மாநில ஆசிரியர் கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (எஸ்இஆர்டி) தயாரித்து அச்சிட்டுள்ளது.
இந்த கையேட்டில் தெரிவித்துள்ளபடி பத்தாம் வகுப்பு அறிவியல் பாடங்கள்
நடத்தும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் எஸ்இஆர்டி தொடங்கியுள்ளது.
10,000 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 20,000 ஆசிரியர்கள் இந்த
பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேம்படுத்தப்பட்ட இந்த செய்முறை
பாடத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ள சுமார் 8 லட்சம்
மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆசிரியர்கள் செய்து காட்ட வேண்டிய செய்முறைகள்,
ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரேகட்டமாக நடத்த வேண்டும்.அதில்
உயிரியல், தாவரவியல் பிரிவுகளில் 1, உயிரியல், விலங்கியல் பிரிவுகளில் 4,
வேதியியல் பிரிவில் 5, 6, இயற்பியல் பிரிவில் 9 ஆகியவற்றையும், இரண்டாம்
கட்டமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை உயிரியல் தாவரவியல் பிரிவில் 2,
விலங்கியல் பிரிவில் 3, வேதியியல் பிரிவில் 7, 8, இயற்பியல் பிரிவில் 10
ஆகியவற்றையும் செய்துகாட்ட வேண்டும். இதுதொடர்பாக, மாநில அளவில்
கருத்தாளர்களுக்கான பயிற்சி கடந்த 3ம் தேதி வரை நடந்தது. பயிற்சி பெற்ற
அவர்கள் நேற்று முதல் 12ம் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளனர்.