நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200
பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மித்ரி இராணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: நாடு
முழுவதும் 222 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும். இதன் மூலம்
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெறுவர். மேலும் அஸாம், அருணாசலபிரதேசம்,
ம.பி., உ.பி. ஆகிய மாநிலஙகளி்ல் விரைவில் பாலிடெக்னிக் கல்லூரிகள்
துவக்கப்படும்.
கடந்த ஐந்தாண்டு கால கட்டங்களில் நாடு
முழுவதும் சுமார் 127 தனியார் பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டன. அவற்றில்
பெரும்பாலானவை மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தரமற்ற பேராசிரியர்கள்
போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.