மக்கள் தொகையில் உலகிலேயே 2வது பெரிய நாடு இந்தியா. சமீபத்தில்
வெளியிடப்பட்ட 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில்
உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 50 லட்சம். உலகிலேயே இந்தியாவில்தான்
அதிக அளவிலான மாணவர்கள் உள்ளனர். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையே 31
கோடியே 80 லட்சம்தான். யுனஸ்கோ புள்ளி விவரங்களின் படி சீனாவில் உள்ள
மாணவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 20 லட்சம்.இந்தியாவில் உள்ள மொத்த
மாணவர்களில் 33 லட்சம் பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், 12 லட்சம்
பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் 80
வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது மக்கள் தங்களின் கனவு
திட்டங்களை தெரிவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.95 லட்சம்
மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
வேலைக்கு சென்று படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேர் மாணவர்கள் எனவும்,
மற்றவர்கள் மாணவிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான செலவுகள்
அதிகமாக இருப்பதாலும், குடும்ப சூழல் காரணமாகவும் இவர்கள் வேலைக்கு செல்வது
தெரிகிறது.