சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேற்று
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் தேர்வு
செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா
சேர்க்கை கடிதத்தை வழங்கினார்.அண்ணாமலைப்
பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன. விண்ணப்பித்த
அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட்டது. இரண்டு நாள்
நடக்கும் கலந்தாய்வில் முதல் நாளான நேற்று (10ம் தேதி) ஆயிரத்து நான்கு
பேருக்கும், இரண்டாம் நாளான இன்று(11ம் தேதி) ஆயிரத்து214பேருக்கும்
அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலக பகுதியில் நேற்று காலை 10 மணியில் கலந்தாய்வு தொடங்கி நடந்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா தலைமை தாங்கி சேர்க்கை கடிதத்தை வழங்கினார்.

பல்கலைக்கழக
பதிவாளர் பஞ்சநாதம், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர்,
கிருஸ்துராஜ், பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் வேலுசாமி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.