பட்டதாரி
ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு
முகாம்களுக்கு வந்தனர். இவர்களில்
சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின்
மதிப்பெண்ணில் திருத்தம்செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
பட்டதாரி
ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல்
சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
பட்டதாரி
ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்
தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்
விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த
ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி
ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை
சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
இடைநிலை
ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்
தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம்
பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும்
எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...