புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்
மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம்
அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி
ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது
தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு விளக்கமளித்துள்ள நிதித் துறை செயலாளர்
க.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட
தமிழக அரசு சார்பிலான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும்
அவர்களின் குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
பொருந்தாது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தனது விளக்கக் கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.