பிரதமர் நநேரந்திரமோடி தலைமையில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும் தாக்கலாகும்
முதல் பட்ஜெட் என்பதால் என்ன மாதிரியான அறிவிப்புக்கள் இருக்கும் என
தொழில்துறை, அரசு தரப்பு, பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
நிலவியது.
கடந்த கால 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கையாண்ட மோசமான பொருளாதார கொள்கையே
நாட்டை சரிவு பாதைக்கு கொண்டு சென்றதாக அப்போதைய பா.ஜ., உள்ளிட்ட
எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. விலைவாசி உயர்வு, இந்திய கரன்சி
மதிப்பு குறைவு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளதார மந்தம் இவற்றையெல்லாம்
சீர்தூக்கி நிறுத்தும் வகையில் இந்த புதிய அரசின் பட்ஜெட் இருக்கும் என
பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுள்ளது. இதனை மையமாக வைத்து மத்திய நிதி
அமைச்சர் அருண்ஜெட்லி 2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயார் செய்துள்ளார்.
இவர் பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்க்க ஜெட்லியின் குடும்பத்தினர் அவையில்
அமர்ந்திருந்தனர்.
காலை 11 மணியளவில் லோக்சபாவில் அமைச்சர் ஜெட்லி தனது பட்ஜெட்டை தாக்கல்
செய்து பேசுகையில், பல்வேறு புது, புது விஷயங்களை அறிவித்தார். முன்னதாக
ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக ஜெட்லி சந்தித்து பேசினார்.பயணத்தின் முதல் துவக்கம் : தற்போது
மக்ககள் மாற்றத்தை நோக்கி எதிர்பார்த்திருக்கின்றனர். உலக பொருளாதாரம்
காரணமாக மந்த நிலை தற்போது மீண்டு வருகிறது. ஈராக் போர் காரணமாக எரிபொருள்
விலையில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பு, உற்பத்தி பெருக்க
வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வரிச்சலுகை
இருக்கும். கடந்த கால ஆட்சியில் நடப்பு நிதி பற்றாக்குறை 4.1 சதமாக உள்ளது.
பொருளாதாரம் சீர்தூக்கிட, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில்
உள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு இன்னும் 3 ஆண்டுகளில் 7 முதல்
8 சதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீர்தூக்கும்
பயணத்தின் முதல் துவக்கம் இது. இவ்வாறு அமைச்சர் ஜெட்லி கூறினார்.
9 விமான நிலையங்களில் இ விசா : மேலும் அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: நீர்ப்பாசனம் பெருக்கிட ஆயிரம் கோடி, இளைஞர்களின் அறிவுத்திறம் பெருக்கிட தேசிய அமைப்பு, அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி, 2019க்குள் இது நிறைவேற்றப்படும்.100 நகரங்களை நவீனப்படுத்த திட்டம் , மின்வசதிக்கு 500 கோடி ஒதுக்கீடு, மீண்டும் கிசான் விகாஸ் பத்திரம், 9 விமான நிலையங்களில் இ விசா வழங்கப்படும், அன்னிய முதலீட்டை அதிகரிக்க அரசு விருப்பம், பெண்கள் பாதுகாப்பு வகைக்கு 150 கோடி, பெண் குழந்தைகள் காத்திட 100 கோடி நிதி, மூத்த குடிமக்கள் நலன் காத்திட 6 ஆயிரம் கோடி, தாழ்த்தப்பட்டோர் நலன் காத்திட ரூ.200 கோடி, மூத்த குடிமக்களுக்கு வழங்கும் பென்சன் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
கிராமப்புற வீடுகள் மேம்படுத்த 8 ஆயிரம் கோடி, அனைவருக்கும் சுகாதாரம் உறுதிப்படுத்தும் வகையில், 2 தேசிய இன்ஸ்டியூட்,, இது சென்னையில் ஒரு மருத்துவ இன்ஸ்டியூட் அமைக்கப்படும். வேலை வாய்ப்புக்களை உருவாக்கிட 14. 389 கோடி,விரைவில் 12 புதிய மருத்துவக்கல்லூரி திறக்கப்படும். தொழிற்சாலைகள் கவனிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு கொண்டு வரப்படும். ஒற்றுமை வலியுறுத்தும் சர்தார் பட்டேல் சிலை அமைக்க 200 கோடி, ராஜஸ்தான், தமிழகத்தில் சோலார் திட்ட மையம், அரசின் செலவினங்களை கவனிக்க தனிக்குழு அமைக்கப்படும்.5நகரங்களில் ஐ.ஐ.எம், -ஐ.ஐ.டி., அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி உருவாக்கப்படும், டிஜிட்டல் இந்தியா என இன்டர்நெட் தரும் திட்டம் கொண்டு வரப்படும். அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை இலக்கு, அரியானாவில் தெலுங்கானாவில், தோட்டக்கலை பல்கலை.,, ஆந்திரா, ராஜஸ்தானில் வேளாண் பல்கலை., 5நகரங்களில் ஐ.ஐ.எம், மற்றும் , ஜம்மு, சட்டீஸ்கர், கோவா, கேரளாவில் ஐ.ஐ.டி., உருவாக்கப்படும். குறைந்த விலையில் வீடுக வழங்கும் திட்டத்திற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மதராசாக்கள் நவீனப்படுத்த 100 கோடி, கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டுக்கு 100 கோடி, மீனவ துறையில் நீலப்புரட்சி, அனைத்து விசாயிகளுக்கும் மண்வள அடையாள அட்டை, விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 8 லட்சம் கோடி, வசதி, வேளாண்துறைக்கு 100 கோடி, அசாம், ஜார்கண்டில் விவசாய ஆய்வு மையம், கிராமப்புறங்களில் தொழில் முனைவோர் திட்டம்,
சென்னையில் மருத்துவ இன்டியூட், அனைத்து கிராமங்களிலும் மின் வசதி, விவசாயிகளுக்கு டி.வி. சேனல், உழவர்சந்தைகள் மேம்படுத்த மாநில அரசுக்கு உதவிகள், 2019க்குள் அனைவருக்கும் கழிப்பிட வசதி, உணவு தானியம் விற்க திறந்தவெளி மார்க்கெட், குடிநீர் வசதி பெருக்கிட 3 ஆயிரத்து 600 கோடி, புதிதாக 5 டெக்ஸ்டைல் கிளஸ்டர், வடகிழக்கு மாநில சாலை வசதி மேம்படுத்த 3 ஆயிரம் கோடி, துறைமுகம் வளர்ச்சிக்கு 11 ஆயிரம் கோடி.
முழு விவரம் விரைவில்..,