சென்னையில்
நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவரும்
வகையில் ‘நவசக்தி’ விவேகானந்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து ஆன்மிக கண்காட்சிஇந்து
ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, பிற ஜீவராசிகளை வழிபடுவது,
நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது உள்பட 6
நல்ல குணங்களை மையமாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை
திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில்
நேற்றுமுன்தினம் தொடங்கியது.
இந்த கண்காட்சியில் நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மிக இயக்கங்கள் கலந்துகொண்டன. இதில்
250-க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.‘நவசக்தி’ விவேகானந்தர்கண்காட்சியின்
நுழைவுவாயிலில் ‘நவசக்தி’ விவேகானந்தரின் 9 அடி உயர உருவச்சிலைகள்
வைக்கப்பட்டு உள்ளது. இளைஞர் சக்தி, வணிக சக்தி, வைத்திய சக்தி, ஆச்சார்ய
சக்தி, குடும்ப சக்தி, மகளிர் சக்தி, உழவர் சக்தி, பிரசார சக்தி மற்றும்
உழைப்பாளர் சக்தி ஆகிய 9 சக்திகள் எழுச்சி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள
இந்த சிலைகளை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ஒவ்வொரு
சக்திக்குரிய விளக்கத்தை அரங்கில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர்
விவேகானந்தர் சிலைகளின் அருகே நின்று ஆர்வத்துடன் புகைப்படம்
எடுத்துக்கொண்டனர். பாரம்பரிய விளையாட்டுகள்கண்காட்சியில்
விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், பல்லாங்குழி, கிச்சு
கிச்சு தாம்பலம், கல்லாங்காய், குச்சி எடுத்தல் போன்றவற்றை விளையாடும் முறை
குறித்து சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. கண்காட்சியை பார்வையிட வந்த
பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த விளையாட்டுகளை ஆர்வமுடன்
விளையாடினர்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தர்
ஆசிரமம் சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில், கண்தானம் பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடர் கண்ணப்பர், சிவபெருமானுக்கு தன்
கண்ணைக் கொடுத்த நிகழ்வு சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. வீரப்பெண்கள்‘நிமிர்ந்த
நடை; நேர்கொண்ட பார்வை; நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவு’ ஆகிய
தன்மைகளை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆண்களுடன்
ஒப்பிடுகையில் பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை வெளிக்கொணரும்
வகையில் ‘ராஷ்டிரிய சரிகா சமிதி’ அமைப்பு சார்பில் அரங்கு
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சங்ககால வீரப்பெண்களின் உருவ ஓவியங்கள்
மற்றும் சாதனை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.விளைச்சலையும்,
விவசாயத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு இந்தியா என்பதற்கேற்ப
இந்தியாவின் பண்டைய கால நெற்பயிர்கள் உள் பட 150 வகையான அரிய வகை
நெற்பயிர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. சிலைகள்இந்த
கண்காட்சியில் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு ஆன்மிக இயக்கங்கள் சார்பில்
புத்தகங்கள், ஆன்மிக தத்துவங்கள், மகான்களின் போதனைகள், வாழ்வியல்
நெறிமுறைகள் கொண்ட கருத்துகள் உள்பட ஏராளமான தொகுப்புகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், அரங்கில் வைக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா சிலை, அங்காள பரமேஸ்வரி
அம்மன், விவேக வீரேஸ்வரர் லிங்க சிலை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன்
சிலை உள்பட பல்வேறு சிலைகளும் பார்வையாளர்களை ஈர்த்தன.14-ந்தேதி
(திங்கட்கிழமை) வரை நடக்கும் இந்த ஆன்மிக கண்காட்சியின் ஏற்பாடுகளை,
கண்காட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளருமான
எஸ்.குருமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்து வருகிறார்கள். கண்காட்சியின்
2-வது நாளான நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள்,
ஆன்மிக சிந்தனைவாதிகள், இந்து சமய மதபோதகர்கள், துறவிகள், பொதுமக்கள்,
இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
இந்து ஆன்மிக கண்காட்சி: பார்வையாளர்களை வெகுவாக கவரும் ‘நவசக்தி’ விவேகானந்தர் சிலைகள் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு:
இந்து ஆன்மிக கண்காட்சி: பார்வையாளர்களை வெகுவாக கவரும் ‘நவசக்தி’ விவேகானந்தர் சிலைகள் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |