பிளஸ் 2 உடனடி
தேர்வுக்குப் பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த
மாணவர்களின் முடிவு, இன்று, இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தேர்வுத் துறை
அறிவிப்பு: மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள
மாணவர்களின் பதிவு எண் பட்டியல், ண்tதஞீஞுணt.டண்ஞு14ணூtணூதி.டிண என்ற
இணையதளத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படும்.
'பட்டியலில்
இடம்பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில், மதிப்பெண் மாற்றம் இல்லை'
என, அறிவிக்கப்படுகிறது. மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள், 9ம் தேதி
(இன்று) காலை, 11:00 மணி முதல், சம்பந்தபட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை
இயக்குனர்
அலுவலகங்களுக்கு
நேரில் சென்று, பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய
மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.







