ஆறகழுர்
அரசு மேனிலைப் பள்ளியில் இன்று 05.09.14 காலை 9.30 மணிக்கு ஆசிரியர் தின விழா தமிழ்த்தாய்
வாழ்த்துடன் இனிதே தொடங்கப்பட்டது.விழா பள்ளி, தமையாசிரியர் திரு. ஆர்.தேவராஜன் தலைமையுரையுடன்
தொடங்கப்பட்டது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், மற்றம் ஊர் பிரமுகர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழாவின் முதன்மை நிகழ்வாக, நீண்ட
காலமாகக் கட்டப்படாமலிருந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டதையொட்டி திறப்பு விழா
நடைபெற்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் வரவழைக்கப்பட்டு
கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், ஆசிரியர் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக
பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களே ஆசிரியர்களாக மாறி, வகுப்பிற்கு
ஒருவர் வீதம் கற்பித்தல் பணியை மேற்கொண்டனர். அவர்களுள் முதலிடம் பெறும் மாணவ ஆசிரியருக்குப்
பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் கலந்து கொண்டு விவாதித்த பட்டிமன்றம்
“மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுபவர் பெற்றோரா? ஆசிரியரா? என்ற தலைப்பில்
சிறப்பாக நடைபெற்றது.மேலும், ஆசிரியர்களுக்கிடையேயான “வினாடி வினா”
போட்டியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கயிறு இழுத்தல், சட்டி உடைத்தல், இசைநாற்காலி
போன்ற போட்டிகளும் ஆசிரியர்களுக்கிடையே நடத்தப்பட்டது.ஆசிர்யர்கள் அனைவருக்கும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக
ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைமையாசியர் திரு. ஆர்.தேவராஜன் அவர்கள் சிறப்பு பரிசுகளை
வழங்கி வாழ்த்திப்பேசினார். மாலை 4.30 மணியளவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே
நிறைவுற்றது.







