தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் இன்று 05.09.14 மாலை 02:00 மணி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி அம்மையார் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர் தின விழா தமிழ்த்தாய்
வாழ்த்துடன் இனிதே தொடங்கப்பட்டது.விழா பள்ளி, தமையாசிரியர் திரு. கா.மணி அவர்களின் தலைமையுரையுடன்
தொடங்கப்பட்டது. விழாவிற்கு கள்ளகுறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் திரு.ஆர்.பழனிவேல் மற்றும் பைத்தந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு.அ.இரவிச்சந்திரன்,பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், மற்றம் ஊர் பிரமுகர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழாவின் முதன்மை நிகழ்வாக,மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை பற்றியும் அறிவியல் கண்காட்ச்சியில் மாநில அளவில் முதன்மை பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டியும்,ஆசிரியர் தின சிறப்பு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.பின்னர்மாணவர்களால் உருவாக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.எதிர் கால சமுதாயத்திற்கு ஆசிரியரே ஆணிவேர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பேச்சி போட்டிநடைபெற்றது. பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி பேசினார்.அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுதலை தெரிவித்தார்.
மாலை 4.30 மணியளவில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே
நிறைவுற்றது.







