இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்க தயாராக உள்ளன. பள்ளி திறந்தவுடன், நோட்டுகளும் வழங்கப்படுகிறது. கல்வி
ஆண்டுக்கான, முதலாம் பருவ தேர்வு முடிந்து, காலாண்டு விடுமுறைக்குப்பின்,
ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இரண்டாம் பருவத்துக்கான பாட
புத்தகங்கள், நோட்டுகள் சில வாரங்களுக்கு முன்னரே வந்தன. இவை பாதுகாப்பாக,
பல்வேறு பள்ளிகளில் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. யூனியன்
வாரியாக கொண்டு செல்லப்பட்ட பின், தற்போது பள்ளி நிர்வாகங்கள் பாட
புத்தகம், நோட்டுகளை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையான பாட
புத்தகங்கள், நோட்டுகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பள்ளி
கல்வி துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. தமிழ்நாடு பாடநூல்
நிறுவனம் மூலம், பல்வேறு அச்சகங்கள் மூலம், பாட புத்தகங்கள் தயார் செய்து,
நேரடியாகவே அங்கிருந்து, ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பள்ளி
திறக்கப்படும் நாளில் மாணவ, மாணவியருக்கு, ஏமாற்றம் இன்றி, பாட
புத்தகங்கள், நோட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆறாம்
வகுப்பு தொகுதி ஒன்று, 18,200, தொகுதி இரண்டு, 18,900. ஏழாம் வகுப்பு
தொகுதி ஒன்று, 17,800. தொகுதி இரண்டு, 18,500. எட்டாம் வகுப்பு தொகுதி
ஒன்று, 19,900. தொகுதி இரண்டு, 19,700. ஒன்பதாம் வகுப்பு தொகுதி ஒன்று,
இரண்டு, மூன்று தனித்தனியாக, 31,400 புத்தகங்கள் தேவை. பெரும்பாலான
புத்தகங்கள் வந்து விட்டன.
மொழி பாடங்களாக
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி, கோபி கல்வி மாவட்டத்தில் கன்னடம் உள்ளது.
இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் முழுமையாக வந்துள்ளன. புத்தகங்கள்
அனைத்தும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளுக்கு
வழங்கப்பட உள்ளது. ஆங்கில மீடியம் சுய நிதி பள்ளிகளுக்கு, புத்தகம்
வழங்கப்பட மாட்டாது. ஒவ்வொரு வகுப்புக்கும், தலா, 66,100 என, ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு மொத்தம், 3,30,500 நோட்டுகள்
வந்துள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளுக்கு இவை
வழங்கப்படும். சுய நிதி பள்ளிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. ஈரோடு
மாவட்டத்தில் ஈரோடு, கோபி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில்
மொத்தம், 234 பள்ளிகள் உள்ளன. 70 சதவீதம் வரை பள்ளிகளுக்கு நோட்டு,
புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. வரும், ஏழாம் தேதி மாணவ, மாணவியர்
அனைவருக்கும் புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும், என,
எதிர்பார்க்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறும் போது,
""வரும், ஏழாம் தேதி பள்ளி திறக்கும் நாளில் மாணவ,மாணவியருக்கு
பற்றாக்குறையின்றி வழங்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''
என்றார்.