Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் எண்ணிக்கை 376 ஆக அதிகரிப்பு :
தமிழகத்தில் ஐஏஎஸ்
பணியிடங்களின் எண்ணிக்கையை 355-லிருந்து 376 ஆக உயர்த்தி மத்திய பணியாளர்
மற்றும் பயிற்சித்துறை அனுமதி அளித்துள்ளது. இந்தியா
முழுவதும் 4,700-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகிறார்கள்.
ஐஏஎஸ் பணியானது அகில இந்திய பணியாக கருதப்படுகிறது. காரணம், ஐஏஎஸ்
அதிகாரிகள் குறிப்பிட்ட மாநிலத்தில் பணியாற்றினாலும் மத்திய அரசின்
அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள்ஒவ்வொரு
மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐஏஎஸ் பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டிருக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த எண்ணிக்கை
திருத்தியமைக்கப்படும். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை 355
ஆக இருந்தது. இதில், 247 இடங்கள் நேரடி நியமனத்துக்கு உரியவை. 108 இடங்கள்
(33 சதவீதம்) பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
பதவி உயர்வைப்
பொருத்தவரையில், 85 சதவீத இடங்கள் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (டிஆர்ஓ)
மூலமாக நிரப்பப்படும். எஞ்சிய 15 சதவீத இடங்கள் வருவாய்த்துறை அல்லாத
பிரிவின் (நான்-ரெவின்யூ) கீழ் கல்வித்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை
உள்ளிட்ட இதர துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பப்படும். இந்த
முறை, ‘செலக்சன்’ என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த
2008-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டது.
பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், புதிய பணியிடங்கள்
தோற்றுவிக்கப்பட்டதாலும், கடந்த ஆண்டு ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கையை 13
சதவீதம் அளவுக்கு உயர்த்தி தருமாறு மத்திய பணியாளர் மற்றும்
பயிற்சித்துறைக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
376 ஆக அதிகரிப்பு
இந்த நிலையில்,
ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கையை 355-லிருந்து 376 ஆக அதிகரித்து மத்திய
பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இதில் 262
இடங்கள் நேரடி நியமனத்துக்காகவும், 114 இடங்கள் பதவி உயர்வு
நியமனத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஐஏஎஸ் பணியிடங்களின்
எண்ணிக்கை கூடுதலாக 21 உயர்த்தப்பட்டிருப்பதால் 6 இடங்கள் பதவி உயர்வு
நியமனத்துக்கு கிடைக்கும். அதில் 5 இடங்கள் வருவாய்த்துறை பிரிவுக்கும்,
ஓர் இடம் வருவாய்த்துறை அல்லாத பிரிவுக்கும் ஒதுக்கப்படலாம் என்று தமிழக
அரசின் பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








