புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில்
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மண்டல
அளவிலான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.பள்ளி
கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். சபாநாயகர் சபாபதி தலைமை தாங்கி
பேசுகையில், அறிவியல் கண்காட்சி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும்
வகையில் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே கல்விக்காக புதுவையில் தான் அதிக
செலவு செய்யப்படுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களை கடவுளாக மதிக்க வேண்டும்
என்றார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர்
தியாகராஜன் முன்னிலை வகித்து பேசும்போது, இன்றைய அறிஞர்கள் நேற்றைய
மாணவர்கள். மாணவர்கள் நல்ல அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, அனைத்து துறைகளிலும்
தனி முத்திரை பதிக்க வேண்டும். மின்சாரத்தை இயற்கையாக பயன்படுத்துவது
குறித்து பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர். எதிர்காலத்தில் புதுவை
மாணவர்கள் வளர்ச்சிக்கும், நல்ல நிலைக்கும் வரவேண் டும் என்ற எண்ணத்தில்
முதல்வர் கல்விக்கான அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறார், என்றார்.
முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
மாணவர்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை செய்துள்ளது அவர்களின் அறிவுத்திறனை
காட்டுகிறது. மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப அவர்களை திறம்பட கொண்டுவர
வேண்டும். புதுவை மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு
அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறது. வரும் ஜனவரி முதல் 12ம் வகுப்பு
மாணவர்களுக்கு லேப்&டாப் வழங்கப்படும். தொழில்நுட்ப வளர்க்கும்
நிறுவனம் கொண்டு வரப் படும். மாணவர்களுக்கான இலவசங்கள் வழங்கப்படும்.
படிக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொண்டு
புதுவையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களின்
படைப்புகள் 12 நடுவர்கள் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு
பிரிவிலும் 6 படைப்புகள் வீதம் 24 சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு
செய்யப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 2 பரிசு வீதம் 8 சுழற்கோப்பை, ஒவ்வொரு
நிலையிலும் சிறந்த படைப்புக்கு 4 பரிசுகளும், புதுவை அரசு 101 இன்ஸ்பயர்
படைப்புகளை தேர்வு செய்து ரூ.5ஆயிரம் வீதம் பரிசு வழங்க உள்ளது.
நிகழ்ச்சியில்
பாலன் எம்எல்ஏ, இணை இயக்குனர் பார்த்தசாரதி, அனைவருக்கும் கல்வி திட்ட
இயக்குனர் கிருஷ்ணராஜ், முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வன், என்எஸ்எஸ்
மாநில ஒருங்கிணைப்பாளர் பூபதி, பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து
கொண்டனர்.
முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு







