மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து
உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே
பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும்
தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.வரும் காலத்தில் மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதித்
தேர்வில் இருக்காது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஒருவேளை தமிழக அரசு மேல்முறையீடு
செய்து மதிப்பெண் தளர்வை தக்க வைக்க
முயற்சிசெய்தால் மட்டுமே மதிப்பெண் தளர்வு
நடைமுறையில் இருக்கும்.
இனி இரண்டாவது பட்டியல் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.ஆதிதிராவிடர்
மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின்
பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள்
யார்?90 க்கும்
அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களா?மதிப்பெண்
தளர்வு பெற்று தேர்ச்சி பெற்றவர்களும்
இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெறுவார்களா? என்ற
கேள்வி எழுந்துள்ளது.மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து
உத்தரவிட்டுள்ளதால் இந்த இரண்டாவது பட்டியலில்
90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே
இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பே
தற்சமயம் நிலவுகிறது.
இந்த குழப்பத்திற்கு முடிவு ஏற்பட வேண்டும்
என்றால் இரண்டாவது பட்டியல் என்று பரவலாக அழைக்கப்படும்
ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின்
பெயர் பட்டியல் விரைவில் வரவேண்டும். அப்போது தான் குழப்பம்
நீங்கும்.