தேவகோட்டை
-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவிகளுடன் மருத்துவர்
பிரியா வளர் இளம் பெண்களுக்கான
தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வுகலந்துரையாடல் நடத்தினார்.
கலந்துரையாடல்
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை 6ம் வகுப்பு மாணவி
தனலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்
தலைமை தாங்கினார் .உதவி தலைமை ஆசிரியை
முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். மருத்துவர் பிரியா வளர் இளம்
பெண்களுக்கான தொற்றா நோய் குறித்தும்
,அது வருவதற்கான காரணம் என்ன?அதனை
எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி
விளக்கி கூறினார்.பொதுவாகவே காய்கறி ,பேரிச்சம்பழம் ,பால் போன்றவை தினசரி
உணவில் சாப்பிட வேண்டும் என்றார்.இரத்த கொதிப்பு,சர்க்கரை
போன்றவை முப்பது வயதில் வந்து
விடுகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தில்
இலவசமாக 30 வயதிலியே அவசியம் பரிசோதிக்க வேண்டும்.பள்ளி வயது பெண்குழந்தைகள்
எவ்வாறு தன் சுத்தம் பேண
வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள்
வழங்கப்பட்டன.
அசைவ உணவை உண்ணுதலைப் பெரும்பாலும்
தவிர்த்தல் நல்லது.எந்த உணவையும்
அதிகமாக எண்ணெயில் பொரித்து உண்ணுதல் கூடாது.மீன் உணவு
நல்லது.முட்டையில் மஞ்சள் கருவை 30 வயது
முதல் தவிர்த்தல் நல்லது.
மாணவி பரமேஸ்வரி தொற்றா நோய் வரக்காரணம்
என்ன? என கேட்டார் .உணவு
முறையே முக்கிய காரணம் .அந்த
காலத்தில் விவசாயம் செய்தார்கள்.குழந்தைகள் ஓடி,ஆடி விளையாடினர்.ஆனால் ,உணவு முறைகள்
மாறிவிட்டன.பாஸ்ட் பூட்,ச்னக்க்ஸ்
அதிகம் சாப்பிடுதல் இவற்றால் கொழுப்புகள் இரத்தக் குழாயில் போய்
படிந்து விடுகிறது.இப்படி பல காரணங்களால்
தொற்றா நோய் வருகிறது என்றார்.
மாணவி கிருஷ்ணவேணி குடல் வால் இறக்கம்
எதனால் ஏற்படுகிறது? என்று கேட்டார் .அதற்கு
மருத்துவர் நொறுக்கு தீனி அடிக்கடி சாப்பிடுவதால்
உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.அது புண்ணாகி வளர்ந்து
விடும்.இது இயற்கையாகவே அனைவருக்கும்
இருக்கும் என்றார்.
மாணவி சொர்ணம்பிகா புகை பிடித்தலால் மட்டும்தான்
புற்று நோய் வருகிறதா? என
வினவினார் .அதற்கு மருத்துவர் புகை
பிடித்தலால் நுரையீரல் புற்று நோய் வருகிறது.புற்று நோய் மார்பு,முளை,எலும்பு ,பல்
என உடலில் எப்படி வேண்டுமானாலும்
வரலாம்.மார்பக புற்று நோய்
,கர்ப்பப்பை புற்று நோய் போன்றவை
முன்னோர்கள் யாருக்காவது இருந்தால் வரலாம்,வராமலும் இருக்கலாம்.உணவு முறைகள் எடுத்து
கொள்வதில்தான் இருக்கிறது என்றார்.
தைராய்டு
தொடர்பாக ராஜேஸ்வரி என்ற மாணவி கேள்வி
கேட்டார்.அதற்கு மருத்துவர் ,தைராய்டு
நோய் அல்ல .அது குணமாகி
விடும் என்றார்.மாணவிகள் கேள்வி
கேட்கும்பொழுது பெற்றோர்களும் உடன் இருந்தனர்.ஆசிரியை
முத்துலெட்சுமி ,கலாவல்லி ஆகியோர் மாணவிகளின் கேள்விகளை
ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவி மங்கையர்க்கரசி
நன்றி கூறினார்.
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான
தொற்றா நோய் குறித்த மருத்துவர்
பிரியா உடன் பள்ளி மாணவிகள்
கலந்துரையாடல் நடத்தினார்கள்.