கல்வி நிலையங்கள் ஒத்துழைத்தால் இதுபோன்று மாதம் 2 முறை பாஸ்போர்ட் மேளா நடத்த தயாராக உள்ளோம். சிங்கப்பூரில்2 நிமிடத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. ஏடிஎம் எந்திரம் போல உள்ள மெஷினில் கைரேகையை பதிவு செய்தால், 2 நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும். இதை 10 பேர் கொண்ட குழுவினர் சென்று பார்த்து வந்துள்ளோம்.இதற்கு போலீசாரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
ஒருவர் பற்றிய குற்றத்தகவல்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். இந்தமுறை அமல் செய்யப்பட்டால் பாஸ்போர்ட் வழங்கும்போது போலீஸ் ‘வெரிபிகேசன்‘ தேவைப்படாது.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலீசார் ஒத்துழைத்தால் இத்திட்டம் விரைவில் சாத்தியப்படும். பாஸ்போர்ட் எடுக்கும் நேரம், காலம் மிச்சமாகும் என்றார்.








