இது வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து மதுரையிலும் செயல்படுத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.அவரின் நேர்முக உதவியாளரும் (மேல்நிலைப்பள்ளி), இத்திட்ட ருங்கிணைப்பாளருமான அனந்தராமன் கூறியதாவது: பள்ளி விபரங்கள், அரசு நலத்திட்டம் வழங்கல், மாணவ பயனாளி உட்பட பல தகவல்கள் அந்தந்த பள்ளிகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் அவ்வப்போது 'அப்டேட்' செய்யப்பட்டாலும் அதுகுறித்த விபரம் முதன்மை கல்வி அலுவலத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படுவதில்லை.
இயக்குனர் அலுவலகம் கேட்கும் போதுதான் பள்ளிகளில் அதுகுறித்து கேட்கவேண்டியுள்ளது. இதை எளிமைப்படுத்த தனி "இணையதளம்" உருவாக்கினால் தேவைப்படும் தகவல்களை முதன்மை கல்வி அலுவலகமே வேண்டிய நேரத்தில் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தகவல்
பரிமாற்றத்திற்கான நேரம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 'யூசர் நேம்' மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்கப்படும். இந்த 'வெப்சைட்'டில் மக்களும் அந்தந்த கல்வி மாவட்ட விவரங்களை தெரிந்துகொள்ள முடியும், என்றார்.








