இன்ஜினியரிங்
படிப்புகளில் சேருவதற்கு தேசிய நுழைவு தேர்வு (ஜெ.இ.இ) நடத்தப்பட உள்ளது.
என்.ஐ.டி.கள், ஐ.ஐ.ஐ.டி.கள் ஆகியவை உட்பட உயர்கல்வி நிறுவனங்களில்
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜெ.இ.இ. தேர்வில் பெற்ற அதிகபட்ச
மதிப்பெண் அவசியம் ஆகும். பி.இ, பி.டெக் சேர்க்கைக்கு முதல்தாளும்,
பி.ஆர்க், பி பிளானிங் சேர்க்கைக்கு 2ம் தாளும் எழுத வேண்டும். இரண்டிலும்
சேர்க்கையை விரும்புவோர் இரு தாள்களும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
முதல்தாள் தேர்வில் எழுத்து தேர்வு அல்லது கணினி வழியிலான தேர்வு
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். 2ம் தாளுக்கு எழுத்து தேர்வு
மட்டும் நடத்தப்படுகிறது.
ஆன்லைனில்
விண்ணப்பிக்க டிசம்பர் 18 கடைசிநாள் ஆகும். ஜெஇஇ மெயின் எழுத்து தேர்வு
ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும். தாள் 1 (பிஇ, பிடெக் கோர்சுகள்) காலை 9.30 மணி
முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும். தாள் 2 (பிஆர்க், பி பிளானிங்) மதியம்
2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். ஜெ.இ.இ.மெயின் கணினி வழியிலான தேர்வு
ஏப்ரல் 10, 11 தேதிகளில் நடைபெறும். முதல் ஷிப்ட் காலை 9.30 மணி முதல்
12.30 மணி வரையும், 2ம் ஷிப்ட் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும்
தேவையெனில் நடத்தப்படும். தாள் 1 ஸ்கோர் மற்றும் அட்வான்ஸ்டிங் தகுதி பெற்ற
1.5 லட்சம் பேரின் பட்டியல் ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியிடப்படும். ஜெஇஇ
தாள் 1, 2 தேசிய ரேங்க் பட்டியல் ஜூலை 7ம் தேதி வெளியிடப்படும்.