சிலருக்கு முதல்
நேர்முகத்
தேர்விலேயே
வெற்றி
கிடைத்து
விடும்.
சிலருக்கு
ஐந்து
நேர்முகத்
தேர்வில்
கலந்து
கொண்ட
பின்பும்,
வேலை
கிடைப்பதில்
தாமதம்
ஏற்படும்.
இத்தகைய
மாணவர்கள்
எந்த
நேரத்தில் தன்னம்பிக்கையை
மட்டும்
இழந்து
விடாதீர்கள்.மேலும் எதிர்மறை எண்ணங்களை
ஒருபோதும்
உங்கள்
மனதில்
ஏற்றாதீர்கள்.
இது
உங்களது
வாழ்க்கையை
தாழ்வுநிலைக்கு அழைத்து
சென்றுவிடும்.
படிப்பை
முடித்தவுடன்
வேலை
தேடும்
காலம்
என்பது
அனைவருக்கும்,
அவர்களது
வாழ்க்கையில்
முக்கியமான
தருணமாக
இருக்கும்.
என்ன செய்யலாம்?
* முதலில்
நீங்கள்
பட்டப்படிப்பை
முடித்ததை
நினைத்து
மகிழ்ச்சி
கொள்ளுங்கள்.
* உங்களுக்கு
எது
நல்ல
வேலை
என
முடிவு
செய்யுங்கள்.
நல்ல
வேலை
எனில்,
சம்பளம்,
அத்துறையில்
உங்களை
வளர்த்துக்
கொள்வதற்கான
வாய்ப்பு,
அவ்வேலையில்
உள்ள
சவால்
ஆகியவை
நீங்கள்
தேடும்
வேலையில்
இருக்கிறதா?
என
பார்க்கலாம்.
* உங்களது
சீனியர்,
நண்பர்கள்
அல்லது
உறவினர்களிடம்,
அவர்கள்
எப்படி
வேலை
தேடினார்கள்
என்பது
பற்றி,
அவர்களுடைய
அனுபவங்களை
கேட்கலாம்.
அதற்காக
அவர்களுடன்
உங்களை
ஒப்பிட்டு
பார்க்காதீர்கள்.
அவர்களிடமிருந்து
ஆலோசனைகளை
மட்டும்
எடுத்துக்
கொள்ளுங்கள்.
* உங்களது
படிப்புக்கேற்ற
இன்டர்வியூ,
எங்கு
நடந்தாலும்
அங்கு
சென்று
கலந்து
கொள்ளுங்கள்.
ஒன்றுக்கும்
மேற்பட்ட
இன்டர்வியூக்களில்
கலந்து
கொள்ளும்போதுதான்,
இன்டர்வியூ
பற்றிய
பயம்
போகும்.
ஒருவேளை
நீங்கள்
இன்டர்வியூவில்
வெற்றி
பெறலாம்.
ஆனால்
இன்டர்வியூவில்
பங்கேற்கும்போது,
வேலை
பெறுவது
மட்டும்தான்
முக்கிய
இலக்கு
என
பார்க்காதீர்கள்.
* நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து, உங்களை நீங்களே அன்பு செலுத்துங்கள். வேலை தேடும் தருணத்தில் ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உங்கள் பக்கம்.