தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையம், 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும், பள்ளி மாணவ,
மாணவியருக்கு, கணித திறன் போட்டித் தேர்வை அறிவித்துள்ளது. டிசம்பர், 7ம்
தேதி நடக்கும் தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், மாணவர்கள், தங்கள்
பெயரை பதிவு செய்ய வேண்டும்.
கணிதத்தில் சிறந்து
விளங்கும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை, மேலும் ஊக்கப்படுத்தும்
வகையில், ஒவ்வொரு ஆண்டும், கணிதத்திறன் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, டிசம்பர், 7ம் தேதி காலை, 11:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கும். தேர்வில், 5 முதல்,
8ம் வகுப்பு வரை பயிலும், அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம்.
இதற்கு, வரும் 29ம்
தேதிக்குள், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். இதில், வெற்றி
பெறுபவர்களுக்கு, தேசிய கணித நாள் விழா நடக்கும், டிசம்பர், 22ம் தேதி,
பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு
வகுப்பிலும், 5,000 (ஒருவர்), 2,000 (2 பேர்), 1,000 (மூவர்), 500 ரூபாய்
(30 பேருக்கு) பரிசு வழங்கப்படும். இவ்வாறு, அய்யம்பெருமாள்
தெரிவித்துள்ளார்.