இறுதி 'கீ ஆன்ஸர்'
வெளியிடாமல் அடுத்த 'நெட்' (தேசிய தகுதி தேர்வு) தேர்வு அறிவிப்பு
வெளியானதால் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. பல்கலை மானிய குழு(யு.ஜி.சி.,) சார்பில் ஆண்டுக்கு இருமுறை
'நெட்' தேர்வுகள் நடக்கின்றன. தேர்ச்சி பெறுவோர் கல்லூரி விரிவுரையாளர்
பணிக்கு தகுதி பெறுவர். கடந்த தேர்வு ஜூன் 29ல் நடந்தது. இதில்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதற்கான 'கீ ஆன்ஸர்'
வெளியிடப்பட்டு செப்.,5க்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என யு.ஜி.சி.,
அறிவித்தது. இதன்பின் இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடப்பட்டு அடுத்த 'நெட்'
தேர்வுக்கு தேதி அறிவிக்கப்படும். அப்போதுதான் தேர்வில் தோல்வியடைந்தோர்,
அடுத்த தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஜூன் 29ல் நடந்த
தேர்விற்கான இறுதி 'கீ ஆன்ஸர்' இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள்
டிச.,28 ல் அடுத்த 'நெட்' தேர்வு நடக்கும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க
நவ.,15 கடைசி தேதி எனவும் யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முந்தைய தேர்வின்
இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடாததால், அத்தேர்வு எழுதியோர் அடுத்த தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.