சென்னை ஐ.ஐ.டி., சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்களுக்கான,
தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் குறித்த, மூன்று நாள் பயிற்சி
வகுப்பு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., வளாகத்தில், இம்மாதம் 14 முதல், 16ம்
தேதி வரை, தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான பிரச்னைகளை, தொழில்நுட்பம்
மற்றும் தொழில் முனைவோர் வாயிலாக தீர்ப்பது குறித்து, விழிப்புணர்ச்சி
அளிக்கும் வகையில் அமையும், பயிற்சி வகுப்பு என, கூறப்படுகிறது. இதற்கான
பதிவுக் கட்டணம், 200 ரூபாய். இதற்கான பதிவுகள், 12ம் தேதி முடிவடைகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள், www.csie.iitm.ac.in என்ற இணையதளத்தில் பதிவு
செய்யலாம். பயிற்சி கட்டணத்தை, முதல்நாள் பயிற்சியின் போது செலுத்தலாம்.







