தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
3,298 தேர்வு மையங்களில் 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக
50,429 பேர் எழுதுகின்றனர்.
தேர்வுகள் காலை 9.15 மணிக்கே தொடங்கும். முதல் 15
நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் விவரங்களைப்
பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
தேர்வு நடைபெறும்.
தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட
பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள்: தமிழ், ஆங்கிலம்,
பிற மொழிப்பாடங்களுக்கு 22 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் புத்தகங்கள்
வழங்கப்படும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள்
கொண்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும்.
சென்னையில் 57,000 பேர்: சென்னையில் 578
பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து
19,559 பேரும் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.








