Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி:
தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும்,
நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து
613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடிநிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன்
வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்துபேசிய அவர்
வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய
அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின்
பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும்
நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.பட்ஜெட் துளிகள்:
*
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை
எடுக்கும் என்று அறிவித்த பன்னீர்செல்வம், நதிநீர் இணைப்பிற்காக
பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
* மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்
* பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி
அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக
மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
* தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி அறிவிப்பு
* சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி
* தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் மார்க் சிட்டி திட்டத்தில் சேர்க்க நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி
* பின்தங்கிய மலைப்பகுதி மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி நிதி
* தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைக்கு ரூ.198.9 கோடி நிதி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்பிற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.46.77 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ.5,568.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.538.49 கோடி நிதி
* நீதிதுறைக்கு ரூ.809 கோடி நிதி ஒதுக்கீடுபால் வளத்துறைக்கு ரூ.100.68 கோடி நிதி
* கைப்பேசிக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* 10 எச்.பி மோட்டார் பம்புக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* ஏலக்காய் மீதான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* எல்.இ.டி விளக்குகளுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ரூ.183 கோடி நிதி
* குடிமைப் பொருள் விநியோக திட்டத்திற்கு ரூ.5300 கோடி நிதி ஒதுக்கீடு
* பாலங்கள், ஏரிகள் பராமரிப்பு மற்றும் புதிய ஏரிகள் உருவாக்க ரூ.334.57 கோடி நிதி
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696 கோடி நிதி ஒதுக்கீடு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








